'கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்பதற்கு ஆதரவுதருகிறேன்' என பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சிலதினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து மதமாற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, கடந்த இருநாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'மத மாற்றத்தை தடுக்க தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது' என்றார். இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கட்டாய மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும். இதற்காக கடுமையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படவேண்டும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
ஆனால், நான் உறுதியாக கூறுகிறேன். இத்தகைய சட்டத்தால் ஓட்டுவங்கி பாதிக்கப்படும் என்பதால் பாஜவை தவிர வேறு எந்தகட்சியும், கட்டாய மதமாற்ற தடைசட்டத்துக்கு ஆதரவு தராது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என நாடாளுமன்றத்தில் வெங்கய்ய நாயுடு கூறியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தாமாக முன்வந்து தங்களது சொந்தமதத்துக்கு மாறுவதை எதற்காக எதிர்க் கிறார்கள். சமீபத்தில் சில பாஜ தலைவர்கள் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எனவே, பாஜ தலைவர்கள் நிதானமாக பேசவேண்டியது அவசியம். இதுபோன்ற சர்ச்சைகளுக்குள் சிக்காத வகையில் நடந்து கொள்ளவேண்டும். ராமர் கோயில் விஷயத்தில் பாஜ உறுதியாக உள்ளது. ஒருமித்த கருத்துடனோ அல்லது நீதி மன்றத்தின் உத்தரவுபடியோ ராமர்கோயில் கட்டப்பட்டே தீரும். 2019ம் ஆண்டு வரை எந்த தேர்தலிலும் பாஜக.,வுக்கே வெற்றிகிடைக்கும். ஏற்கனவே மூழ்கிப்போயுள்ள காங்கிரஸ் மிகவும் பல வீனமடைந்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கும் எங்கள் இலக்கு வெகு தூரத்தில் இல்லை. என்று அவர் கூறினார்
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.