அமித் ஷா வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் பெரும்மாற்றம் வரும் என்று பாஜக. தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராம்மாதவ் தெரிவித்தார்.
பா.ஜ.க. தேசிய பொது செயலாளர்களில் ஒருவரான ராம்மாதவ் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு வியாழக் கிழமை வந்தார். அங்கு சிறப்பு தரிசனத்தை முடித்துக்கொண்ட ராம் மாதவ், சங்கரமடத்தில் நடந்த மகா பெரியவரின் ஆராதனை விழாவில் கலந்துகொண்டார். அங்கு சங்கரமட பீடாதிபதிகள் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசிபெற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது:
மோடி தலைமையில் ஆட்சி பொறுப் பேற்ற 6 மாதத்தில் மக்கள்மத்தியில் பாஜக. ஆட்சிமீது திருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாடுமுழுவதும் 1.60 கோடி பேர் பா.ஜ.க.வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இது வரும்காலங்களில் மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் நடைபெற உள்ள பாஜக. கூட்டத்துக்கு தேசியத்தலைவர் அமித்ஷா வருகை புரிய உள்ளார். அவர் 2 நாள்கள் தமிழகத்தில் தங்க உள்ளார். அப்போது தமிழக அரசியல்குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார். அமித்ஷா வருகைக்கு பிறகு தமிழகத்தில் அரசியல்மாற்றம் பெரியளவில் ஏற்படும் என்றார் ராம் மாதவ்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.