வங்க சிங்கத்தைச் சாய்க்கும் சாரதா! தப்பிக்குமா மம்தா அரசு?!

 சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் மதன்மித்ராவை சி.பி.ஐ. கைது செய்ததது, முதல்வர் மம்தாவின் கோபத்தைக் கிளறியிருக்கிறது. "கொல்கத்தா வரும் மத்திய அமைச்சர்களை, பதிலுக்கு நாங்கள் கைது செய்யவா?" என்ற அவரது ஆவேச வார்த்தைகளில் விவேகம் தொலைந்து போயிருப்பது, அவரது அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

 

மேற்கு வங்காளம், ஓடிஸா மாநிலங்களில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. இதில் முதலீடு செய்த ஏழைத் தொழிலாளார்களின் வாழ்க்கையில் இடி விழுந்தது. ஏழைகளின் முதலீட்டுப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய், திரிணாமுல் கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான குணால் கோஷ் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு விசாரணை மந்தமாகத் தொடரவே, கடந்த மே மாதத்தில் இந்த வழக்கு சி.பி,ஐக்கு மாற்றப்பட்டது. நிதிநிறுவன அதிபர் சுதிப்தாசென் கைதானார். இதன்பின், மம்தாவின் திரிணாமுல் அரசில் இருக்கும் பல அமைச்சர்களின் தலை உருளத் தொடங்கியது. இதன்பின், சிரின்ஜய் போஸ் என்ற திரிணாமுல் எம்.பி. கைது செய்யப்பட்டதும் சி.பி.ஐ.க்கு எதிராக வெடிக்கத் தொடங்கினார் மம்தா. மத்திய அரசுக்கும் சி.பி.ஐ.க்கும் எதிராக பேரணிகளை நடத்தினார். ஆனால், இதைப் பொருட்படுத்தாத சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம், மம்தா அரசின் அமைச்சர் மதன் மித்ராவைக் கைது செய்தனர். இதனால், கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் மம்தா. 'தீதி' என்று தொண்டர்களால் பாசமுடன் அழைக்பப்படும் மம்தா இந்த விவகாரத்தினால் தீப்பிழம்பாய் பொங்கி வருகிறார்.

ஆனால், 'சி.பி.ஐ. தன் கடமையைத்தான் செய்கிறது' என்ற பதிலைச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. கடந்த மே மாதமே விசாரணைக்கு வருமாறு மதன் மித்ராவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அப்போது உடல்நலக் குறைவு என்ற காரணத்தைச் சொல்லி, மருத்துவமனையில் 'அட்மிட்' ஆனார் மதன். இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை காத்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கடந்த வெள்ளியன்று விசாரணை மேற்கொண்டார்கள். சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் மதன் கைது செய்யப்பட, மம்தா அதிர்ந்து போனார். சாரதா நிறுவன கார்களைப் பயன்படுத்தியது, அதன் அதிபர் சுதிப்தாசென்னை ஒரு நிகழ்ச்சியில் புகழ்ந்தது, அவரிடம் நன்கொடை வாங்கியது உட்பட பல குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறது சி.பி.ஐ. தரப்பு.

"மம்தாவிற்கு நெருக்கமானவர்களே, சாரதா சிட்பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்" என்று களமிறங்கியிருக்கும் எதிக்க்கட்சிகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் மம்தா. "இந்த விவகாரத்தில், முதலமைச்சர் மம்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஷ்ட் கட்சியைச் சேர்ந்த சூரியகாந் மிஸ்ரா. "ஊழலில் திரிணாமுல் அரசு ஊறித் திளைத்திருப்பதை, சி.பி.ஐ. விசாரணை காட்டுகிறது" என்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த சித்தார்த்நாத் சிங். இந்த விஷயத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பா.ஜ.க என்று எல்லா கட்சிகளும் எதிர்வரிசையில் நிற்பதால், சோர்ந்து போயிருக்கின்றனர் திரிணாமுல் தொண்டர்கள்.

சி.பி.ஐ.யின் விசாரணை நடவடிக்கைகள் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்வதால், பிரதமர் மோடியை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார் மம்தா. இதனால்தான் டில்லியில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலும் மம்தா கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

"அமைச்சரின் கைது பற்றி, மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்து, என்னைக் கைது செய்வீர்களா?" என்று ஆவேசப்பட்டிருக்கிறார் மம்தா. மேலும், "சகாரா மோசடி வழக்கை மட்டும் சி.பி.ஐ. ஏன் மெதுவாக விசாரிக்கிறது, பிரதமர் மோடியின் சகாரா அதிபர் சுப்ரதா ராய் இருக்கும் போட்டோவை பாருங்கள்" என்று தனது செல்போனில் போட்டோவைக் காட்டி கேட்டிருக்கிறார். அது மட்டுமின்றி, "சி.பி.ஐ.யைக் கண்டித்து தெருவில் இறங்கிப் போராடுவோம். இனி மத்திய அமைச்சர் யாராவது மேற்கு வங்கம் வந்தால், அவரைக் கைது செய்வோம்" என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார் மம்தா. 'நாலாபுறமும் இருந்து வரும் விமர்சனக் கணைகளைச் சகிக்க முடியாமல், கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கமாகச் சீறுகிறார் மம்தா' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கால் நூற்றாண்டு ஆட்சியை அகற்றியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. விறுவிறுப்பான வளர்ச்சிக்கு வித்திட்ட மம்தாவின் நண்பர்கள் தான், தற்போது சாரதா நிறுவன மோசடியின் மூலமாக வேகமான வீழ்ச்சிக்கும் காரணமாகி இருக்கிறார்கள். 'சுவரில் முளைத்த ஆல விதையினால், வீடு இடிந்து விடக் கூடாது' என்பதே திரிணாமுல் தொண்டர்களின் ஏக்கம். 'தீதி'யின் தீயான வார்த்தைகளைவிட, நம்பிக்கையான வாக்குறுதிகளே அவர்களின் முதல் தேவை!

நன்றி : ரிப்போர்ட்டர்
பா.உதய்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...