‘நேரு மாமா’ சதி…? நெப்போலியன் சுளீர்!

 'அமித்ஷா, விசிட்டில், முக்கிய நிகழ்வாக, தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், பா.ஜ.க.வில் இணைந்தார். அமித்ஷா முன்பாக மொபைல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி பா.ஜ.க.வில் அவர் சேர்ந்த உடனேயே, நூறு உறுப்பினர்களை சேர்க்கும் படிவங்கள் அவரிடம் வழங்கப்பட்டது.

அதன்பின் கமலாலயத்தில் பேட்டியளித்த நெப்போலியன், "நான் பா.ஜ.க.வில் இணைவதாக அழகிரியிடம் கூறினேன். அவர் அதற்கு முழுசம்மதம் தெரிவித்தார்.

அவர் ஆசியுடன்தான் இந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். பா.ஜ.க.வில் அழகிரி இணைவது பற்றி, அவர்தான் முடிவு செய்வார்" என்றார்.

தி.மு.கவில் இருந்து விலகியது ஏன், பா.ஜ.க.வில் சேர்ந்தது எப்படி? என்ற கேள்விகளுடன் நெப்போலியனிடம் தனிப் பேட்டி கண்டோம். அவரது பதில்கள்:

தி.மு.க.வில் இருந்து நீங்கள் விலகக் காரணம்?
"முதல் காரணம் எனது மாமா கே.என்.நேருதான்."
உங்கள் மாமா நேருதான் உங்களை பாரதிராஜா மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தி.மு.க.வில் அவரால்தான் உங்களுக்கு நெருக்கடியா?
"நான் சினிமாவுக்கு வருவதற்கு என் மாமா முன்னாள் அமைச்சர் கே.என்.நேருதான் காரணம். நான் தி.மு.கவில் அடிப்படைத் தொண்டனாக சேர்ந்ததற்கும் என் மாமாவே காரணம். எம்.எல்.ஏ. ஆகி, எம்.பி. ஆகி மந்திரி ஆவதற்கும் அவர்தான் காரணம். நான் தி.மு.கவை விட்டு இப்போது வெளியே வந்ததற்கும் அவர்தான் காரணம்."

தி.மு.க.வை விட்டு வெளியேறும் அளவுக்கு நேரு என்ன நெருக்கடி கொடுத்தார்?
"நான் மத்திய அமைச்சராக இருக்கும்போது கூட என்னை செயல்படவே விடலியே. என்னை தொகுதிக்குள்ளேயே நுழைய விடவில்லையே. கட்சியில் எதுவுமே செய்ய முடியாமல் தடுத்தது எல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தெரியும்.

ஸ்டாலினுடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு?
"ஸ்டாலின் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனால், அவரது செயல்பாடுகள் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். சொந்த அண்ணனையே கட்சியை விட்டு நீக்கி வச்சிருக்கார். 'எந்தக் காரணத்துக்காக அவரை கட்சியை விட்டு நீக்கினீங்க'ன்னு ஒறு வருஷத்துக்கு முன்னாடியே நான் கேள்வி எழுப்பினேன். இதுவரை பதில் வரவில்லை. அவர்கள் குடும்பத்திலேயே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அதையே அவர்களால் தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது என்னை போன்ற சாதாரணமானவர்களின் பிரச்சினையை எப்போது தீர்க்கப் போகிறார்கள் என நினைத்துதான் கட்சியில் இருந்து ஒதுங்கினேன். இப்போது இந்த இயக்கத்தை (பா.ஜ.க) சேர்ந்த நிர்வாகிகளும் நண்பர்களும் என்னை இந்த இயக்கத்துக்கு வந்து மக்கள் பணியாற்றுங்கள் என்று அழைத்தார்கள். அதைத் தட்ட முடியாமல் பா.ஜ.க.வில் இணைந்து விட்டேன்."

உங்களின் 16 வயது முதல் 35 வருடமாக தி.மு.க.வில் இருப்பதாகச் சொல்கிறீர்கள். கருத்து வேறுபாடுகளை களைய முயற்சிக்கவில்லையா?
"35 வருஷமா தி.மு.க.வைத் தவிர, கலைஞரைத் தவிர, உதயசூரியனைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது. அப்படி வெறித்தனமா இருந்த நானே இப்ப கட்சியை விட்டு வெளிய வர்றேன்னா, அதற்கு என்ன காரணம், அங்கு எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்குங்க. அதே சமயம், எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் கொடுக்கவில்லை. கட்சி நடவடிக்கைகள் பிடிக்காததுதான் காரணம்.'

பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டீர்கள், இனி அழகிரியைச் சந்திப்பீர்களா?
"நிச்சயமாக அழகிரியைச் சந்திப்பேன்".
இவ்வாறு பதிலளித்த நெப்போலியன், 'இனி எனது அரசியலை பொறுத்திருந்து பாருங்கள்' என பேட்டியை முடித்துக் கொண்டார்.

'கிழக்கு சிவக்கையில் தாமரை மலருதுல்ல…' என்ற பாடலை 2016-ல் தேர்தல் பிரசாரத்தில் நெப்போலியன் பாட ரிகர்சல் பார்த்துப்பாரு!

நன்றி : குமுதம்
ஆர்.சிந்து

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...