நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு குவிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டில்லியில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தயாரிப்பு துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள்தேவை. நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் , 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்புநாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம்செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன்மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப் பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது.
வலிமையான தயாரிப்பு துறையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எண்ணங்களை ஈடேறச்செய்ய முடியும். மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தி, முதலீட்டாளர் களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழுமாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 25 சதவீதம் அதிகரித்து, 1.04 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதேகாலத்தில், 82,920 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.