இந்த வீழ்ச்சி இந்தியாவுக்கு இறைவன் கொடுத்த வரம்

 கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 52 டாலரை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (நாம் பயன்படுத்துவது ப்ரெண்ட் க்ரூட் வகை) எண்ணை வள நாடுகள் உற்பத்தியை குறைக்காமல் ஒன்றோடொன்று போட்டி போட்டு விற்று வருவதால் இந்த வீழ்ச்சி.

இதில் மிகவும் பாதிக்கப்படப் போவது, ஈரான், ஈராக் மற்றும் ரஷ்யா. அதோடு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பாவிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள். இதற்கு மூல காரணமாக சிலவற்றை சொல்லலாம்

1) உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தை கொண்ட அமெரிக்கா "ஷேல் கேஸ்" தொழில்நுட்பத்தால் தன்னிறைவு பெற்று வருவது

2) கச்சா எண்ணை விலை ஏறிவிடும் என்று செயற்கையாக அதை வாங்கி வைத்தவர்கள் இப்போது வேறு வழியில்லாம‌ல் கிடைக்கும் விலையில் விற்பது.

3) அமெரிக்காவின் கைப்பாவையான சௌதி அரேபியா, ஷியா நாடுகளான ஈரான் மற்றும் ஈராக்கின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக உற்பத்தியை குறைக்காமல் இருப்பது. அமெரிக்கா, சௌதியை வைத்து ரஷ்யாவை ஒடுக்க நினைப்பது (சௌதி அரெபியாவின் உற்பத்தி செலவு மிகக் குறைவு, ஆனால் ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகியவற்றின் செலவு கூடுதல்)

4) சீனாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்களின் எதிர்ப்பார்ப்பு.

5) ஒவ்வொரு நாடும் கச்சா எண்ணை உற்பத்தியில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று உற்பத்தியை பலவாராக பெறுக்கி உள்ளன. இதை உடனுக்குடன் அவர்களால் நிறுத்த முடியாது.

இந்த வீழ்ச்சி இந்தியாவுக்கு இறைவன் கொடுத்த வரம். பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காமல், எண்ணை நிறுவன‌ங்களின் உற்பத்தி மீதான‌ கலால் வரியை மேலும் உயர்த்தி இந்தியாவின் கட்டமைப்பு பணிகளுக்கு அதை பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் அரசு காலி செய்து விட்டு போன‌ கஜானாவை வளப்படுத்த வேண்டும். இலவசங்களை கொடுக்காமல் தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து தர வேண்டும்.

இவற்றை செய்தால் போதும் இந்தியா நிச்சயம் வளம் பெறும். இவற்றை நிச்சயமாக செய்வார் பிரதம தேச பக்தர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...