ஐந்து மீனவர்களை பாரத அரசு மீட்டது குறித்து அதிமுகவும் மதிமுக தலைவர் வைகோவும் நன்றி தெரிவிக்கத் தவறியது திராவிட இயக்க வரலாற்றின் ஒரு பக்கம். மற்ற சில பக்கங்கள்:
1967ல் நடந்த பொதுத் தேர்தலின் போது முதன் முதலில் காங்கிரஷை வீழ்த்த ஏழு கட்சி கூட்டணி அமைத்த பெருமையும் திமுகவை ஆட்சி பீடத்தில் அமைத்த பெருமையும் ராஜாஜியைச் சாரும். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அண்ணாதுரை முதலில் திமுக கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஷூக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்து ஈவேராவிடம் சென்று ஆசிபெறச் சென்றார். ராஜாஜியின் காரணமாகத்தான் தமிழரசுக் கலக்கம், பார்வேர்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் திமுகவை ஆதரிக்க முன் வந்தன. என்றாலும் அண்ணாதுரை மற்ற கட்சிகளுக்கு அமைச்சரைவையில் இடமளிக்கவில்லை.
தமிழகத்தின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் திமுக கொடி, உதயசூரியன் சின்னம் ஆகியவற்றைத் தன் திரைப்படங்களின் மூலம் கொண்டு சேர்த்த எம்.ஜி.ஆரையே கட்சியைவிட்டு கறிவேப்பிலையை (சாப்பிடும்போது) தூக்கி எரிவது போல் தூக்கி எரிந்தது தான் திமுகவின் நன்றி.
காங்கிரஸ் தயவில் மாநிலத்தில் மைனாரிட்டி அரசு அமைத்து ஐந்தாண்டு காலம், மாநில காங்கிரஸ் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் பதவி கொடுக்க மறுத்த திமுக, அதே சமயம் ஐமுகூட்டணியில் முக்கிய பொறுப்புகளை மிரட்டலிலேயே பெற்று ஒரு பத்தாண்டு காலம் பதவி சுகங்களை அனுபவித்து, கடைசி நேரத்தில் காங்கிரசை நட்டாற்றில் விட்டது!
நன்றி : விஜய பாரதம்
– சி.எம்.ரவி.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.