மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை வழங்கப்படாது.
மத்திய அரசின் நேரடி சமையல் எரிவாயு மானியம் திட்டம், தற்போது நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவுள்ளது.
தமிழகத்தில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமையல் எரிவாயு உருளைக்கான நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் இந்ததத் திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக அரசின் மானியத் தொகை செலுத்தப்படும். மாறாக, வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை வாங்கும்போது, முழுத் தொகையை வழங்க வேண்டும்.
அதன் பின்னர், எரிவாயு உருளை வாங்கிய 3 நாள்களுக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை உள்ளவர்களும் இல்லாதவர்களும் பயன் பெறலாம்.
எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அந்த வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றை வைத்து இருக்கும் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் முகவரிடம் சென்று படிவம் 1, படிவம் 2 ஆகியவற்றை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு படிவம் 1-ஐ வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் 2-ஐ முகவரிடம் வழங்க வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாத நுகர்வோர்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகலை கொண்டு முகவரிடம் படிவம் 3, படிவம் 4-ஐ பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர்படிவம் 3-ல் எரிவாயு நிறுவனம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட எண்களை பூர்த்தி செய்து வங்கியிலும், படிவம் 4-ஐ முகவரிடமும் கொடுக்க வேண்டும்.
மானியம் வேண்டாம் என்றால் அதை அறிவிக்க படிவம் 5 ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
நன்றி : விஜய பாரதம்
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.