நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் எதிர் காலம் குறித்த கனவுகளை மிகுந்த நம்பிக்கையுடன் காணுகின்றனர். அவற்றை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்' என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
தில்லி சட்ட பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது , தில்லியில் தேர்தல்பிரசார நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அதன் முன்னோட்டமாக அக்கட்சி முதலாவது தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தை தில்லியில் சனிக்கிழமை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுக்கு பெருவாரியான வாக்குகளை அந்தமாநில மக்கள் அளித்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் வெற்றிப்பாதையில் பாஜக அதன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசில் மேல்தட்டு முதல் கீழ் நிலையில் உள்ளவர்கள் வரை ஊழல் என்பதே இல்லாத நிலையை உருவாக்க நான் தீவிரமுயற்சி எடுத்து வருகிறேன். நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் எதிர் காலம் குறித்த கனவுகளை மிகுந்த நம்பிக்கையுடன் காணுகின்றனர். அவற்றை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்.
மத்தியில் ஆட்சிக்குவந்த சில மாதங்களிலேயே "உங்கள் மோடி அரசு' நாட்டில் உள்ள ஏழை மக்கள், வங்கிகளில் கணக்குவைக்கும் நிலையை உருவாக்கியது. பணக்காரர்கள் மட்டுமே பரிவர்த்தனை செய்யும் மையங்களாகத் திகழ்ந்த வங்கிகள் இப்போது ஏழைகளின் கணக்குகளைப் பராமரிக்கும் நிலையங்களாக மாறியுள்ளன. தில்லியில்மட்டும் ஏழை, எளியமக்கள் சுமார் 19 லட்சம் பேர் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், ஏழைகளின் அரசாக மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு விளங்குகிறது.
நீங்கள் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களது வாக்குகளை வீணாக்கி விட்டார்கள். ஆம் ஆத்மி பல பொய்ப் பிரச்சாரங்களை செய்துவருகிறது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி தலைவருக்கு பாடம் கற்றுக்கொடுப்பார்கள். தன்னை அராஜகவாதியாக அறிமுகப்படுத்தி கொள்ளும் அரசியல்வாதியை பார்த்திருப்பார்கள் என்றால், அவர் அர்விந்த் கேஜ்ரிவால்தான். அராஜகவாதியாக வெளிப்படுத்துக்கொள்ளும் நபரால் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது. அவர்களால் காட்டில் சென்று நக்சல்கள் போல சண்டைதான் போட முடியும்.
தில்லிவாழ் மக்களுக்கு 24 மணிநேர மின்சார வசதி கிடைக்கும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். விரும்பிய செல் போன் சேவை நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளும் "மொபைல் போர்ட்டபிலிட்டி' வசதி போல, இனி மின்நுகர்வோரும் விரும்பிய மின்சார நிறுவனங்களின் சேவைக்கு மாறிக்கொள்ளும் "எலக்ட்ரிசிட்டி போர்ட்டபிலிட்டி' வசதியை தில்லிவாசிகள் விரைவில் பெறுவார்கள். தலை நகரில் உள்ள மின் துறைகளிடையே போட்டியை உருவாக்கி அதன் பலன்களை தில்லிவாசிகளுக்கு பெற்றுத்தருவோம் என்றார்
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.