பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏக்கள் 4 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு உயர்நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தடைவிதித்தது. இதேபோன்று தடை உத்தரவு பெற அவர்களுக்கும் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் நான்கு எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தை அனுகியுள்ளனர். பிரிந்த ஜனதா கட்சிகள் ஒன்றிணைய இவர்கள் அனைவரும் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுபடுகிறது.
அதிர்ப்தி எம்.எல்.ஏ.,க்களில் கூறும்போது, 'ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் எங்கள் கட்சியை இணைக்க அனுமதிக்க மாட்டோம். நிதீஷ்குமார் விரும்பினால் அவர் மட்டும் லாலுவுடன் போகட்டும். நிதீஷின் செயல்பாட்டால் எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர் முதல்வர் மாஞ்சியை நீக்கி விட்டு மீண்டும் அப்பதவியில் அமர முயற்சிக்கிறார். பாஜக.,வின் ஆதரவை பெற்றாவது மாஞ்சியை முதல்வராக நீட்டிக்க வைப் போமே தவிர நிதீஷ் முதல்வராக விடமாட்டோம்" என்றார்.
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக.,வில் சேரவேண்டும் என்று பிஹார் சட்டப் பேரவை பாஜக தலைவர் சுசில்குமார் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, ஐக்கிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட 8 பேரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் லாலு கட்சியுடன் நிதீஷ் கட்சி இணைந்தால், அடுத்துவரவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் சுமார் 12 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, அவர்களும் பாஜக.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது
வரும் ஜனவரி 23ம் தேதி பாஜக தலைவர் அமித்ஷா பிஹாருக்கு வர உள்ளார். அப்போது அவரது முன்னிலையில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பாஜக.,வில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.