பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் 'மான் கி பாத்' என்ற பெயரில் வானொலிமூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றத் தொடங்கினார். அப்போது அவர், நாட்டின் முன்னேற் றத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து பொதுமக்களின் யோசனைகளை விருப்பமுடன் வரவேற்று வருகிறார்.
இதைக் கேட்ட சண்டிகாரை சேர்ந்த ராம்தாஸ் சிங்கால் என்ற வியாபாரி, 5 ரூபாய்நோட்டு மற்றும் நாணயத்தின் தட்டுப்பாட்டினை போக்குகிற வகையில் 25 ரூபாய் நோட்டினை வெளியிடலாம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு யோசனை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சந்தையில் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஏராளமாக உள்ளன. எனவே 10 ரூபாய், 20 ரூபாய் என கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 5 ரூபாய்க்கு தட்டுப்பாடு உள்ளது. எனவே 25 ரூபாய் நோட்டு வெளியிடலாம் என பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளேன். 20 ரூபாய் நோட்டுக்கு பதிலாகக்கூட 25 ரூபாய் நோட்டை வெளியிடலாம்.
5 ரூபாய் தர வேண்டிய ஒருவர் 25 ரூபாய் நோட்டை கொடுத்தால் எளிதாக மீதி 20 ரூபாயை இரண்டு 10 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து விடுவோம். அதே போன்று 15 ரூபாய் தருவதற்கு 25 ரூபாய் தந்தாலும் மீதி 10 ரூபாய் எளிதாக தந்துவிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் புத்தாண்டு நாளில் அகில இந்திய வானொலியிலிருந்து, ராம்தாஸ் சிங்காலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில், 25 ரூபாய் நோட்டுவெளியிட வேண்டும் என்ற இவரது யோசனையை பிரதமர் மோடி விரும்பி, இதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே 25 ரூபாய்நோட்டு வெளியிடும் யோசனையை ரிசர்வ் வங்கி பரிசீலித்து, ஏற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி 25 ரூபாய் நோட்டினை வெளியிடுகிறபோது, 5 ரூபாய் சில்லறை தட்டுப்பாடு பெருமளவு நீங்கிவிட வாய்ப்பு இருக்கிறது.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.