ஊழலை வேரறுக்கும் பாஜக ஆட்சியில் “லீலா சாம்சனுக்கு” வேலை இல்லை

 பூனாவை சேர்ந்த பென்ஜமின் ஆபிரஹாம் சாம்சன் என்றும் பொனி இஸ்ரேல் இனத்தவருக்கும், ஆக மதாபாத்தை சேர்ந்த லைலா சாம்சன் என்றும் ரோமன் கத்தோலிக்கருக்கும் 1951-ஆம் ஆண்டு மே 6-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தவர் லீலா சாம்சன். இவரது அத்தை ஆன்னி என்பவர் "அன்சுமன் இ இஸ்லாம் முஸ்லீம்" என்றும் முஸ்லீம் பள்ளியில் 31 வருடம் முதல்வராக இருந்தவர்.

இந்த லீலா சாம்சன் நேரு-சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். பிரியங்கா வதேரர காந்திக்கு இவர் தான் நாட்டிய ஆசிரியார். ஐ.மு.கூ ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் இவருக்கு 5 மிகப்பெரிய அரசாங்க பதவிகள் அளிக்கப்பட்டன. அவைகளில் முக்கியமானது கலாஷேத்ராவின் டைரக்டராக 2005 முதல் 2013 வரை, சங்கீத் நாடக அகாடமியின் தலைவராக 2010 முதல் 2013 வரை, செசார் போர்ட் தலைவராக 2011–2015 வரை —

இதையெல்லாம் எழுதுவதுதான் காரணம் இந்த பின்னனி தெரிந்தால் தான் லீலா சாம்சன் செய்த "லீலைகள்' நாம் புரிந்து கொள்ள முடியும்.

கலா ஷேத்ராவின் டைரக்டராக நியமனம் செய்தவுடனே அதில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. பரத நாட்டியம் –சங்கீதம்– பின்னுக்கு தள்ளப்பட்டு –அரசியல் ,ஊழல் ..சதுராடியது. மத்திய கணக்கு தணிக்கை துறை "கலாஷேத்ரா ஊழலில் தள்ளாடுகிறது" –எனவும், கணக்கு வழக்குகள் ஒழுங்கற்று இருக்கிறது எனவும் அறிக்கையில் கூறியது.

சென்னை உயர்நீதிமன்றமும், சட்டத்திற்கு புறம்பாக, நகரின் மையப்பகுதியில் லீலா சாம்சன் கட்டடம் கட்டுவதாக குற்றம் சாட்டியது.

இதே கதைதான் லீலாசாம்சன் தலைவராக அங்கம் வகித்த சங்கீத நாடக அகாடமியிலும் நடந்தது.

சென்சார் போர்டில் ஊழல் பொங்கி வழிந்தது. சென்சார் போர்டின் CEO லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக CBI-யால் பிடிக்கப்பட்டார்.

திரைப்பட தணிக்கையை தங்களுக்கு சாதகமாக செய்ய வேண்டும். என்ற தயாளிப்பாளர்களிடம் லஞ்சம் பெறுவது லீலாசாம்சன் குழுவினரின் வாடிக்கையானது. இதில் பலர் சிக்கி கைது செய்யப்பட்டனர்.

இதெல்லாம் லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேட்டு கதை. ஆனால் முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் இவர் செய்த "சதிவரலாறுகள்" என்ன என்பதை பார்ப்போம்.

பரத நாட்டியம் என்னும் புனிதமான கலையை மேல்தட்டு மக்கள் தான் கற்கிறார்கள். அது ஒரு சமூகத்திற்கு மட்டுமே பாத்தியப்பட்டதாக இருக்கிறது என்று வீர வசனம் பேசி அதில் "கிறிஸ்த்தவத்தை" புகுத்த பாடுபட்டார் லீலா . கிராமிய கலையுடன் அதை இணைப்பதாக சொல்லி குத்துப்பாட்டு லெவெலுக்கு அதை தரம் குறைக்க முயன்றார்……

இது கலையை தரமிறக்க முயன்ற முயற்சி— ஒருபுறம்— மற்றொருபுறம் திரைப்பட தணிக்கையில், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கும் வசனம், காட்சிகள், பாத்திரங்களை முழுவதும் 'கட்' பண்ணினார். அதேசமயம் இந்துக்களை, சாமியார்களை, மதத்தை விமர்சிக்கும் காட்சிகளை அனுமதித்தார்.

அமீர்கான் "PK" படத்தில் இந்து விரோத காட்சிகள் அனைத்தும் "கத்திரிக்கோலுக்கு" தப்புயது. இரையாகவில்லை. ஆனால் T. தீபேஷ் என்றும் மலையாள டைரக்டரின் "பிதாவும் புத்திரனும்" என்னும் படம் கிறிஸ்தவர்களை புண்படுத்துவதாக கூறி 2012-லிருந்து "அனுமதிக்காக காத்திருக்கிறது".

"மெசேஞ்சர் ஆப் காட்" என்றும் படம் குர் மீத் ராம் ரகீம் சிங் என்பவரால் எடுக்கப்பட்டது. இதிலுள்ள காட்சிகள் சில கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை கேலி செய்வதாக கூறி லீலா சாம்சன் அனுமதி மறுத்தார். ஆனால் மேல் முறையீட்டில் அனுமதி கிடைத்தால் படம் வெளியிடப்பட்டது ..அதனால் லீலா சாம்சன் ராஜினாமா செய்தார்.

உண்மையில் அவர் பதவி காலம் முடிந்து 9- மாதம் ஆன பிறகுதான் " ராஜினாமா, ஊழல் குற்றச்சாட்டுக்கள் "–இவை அவரது நாடகத்தின் காட்சிகளே!

காங்கிரஸ் கட்சியை போலவே, அக்கட்சி தலைவியின் மகளின் நடன ஆசிரியரும் ஒரு ஊழல் பேர்வழி என்பதும் —ஊழலை – ஊழல் தான் ஆதரிக்கும் என்பதும்…. ஊழலை வேரறுக்கும் பாஜக ஆட்சியில் "லீலா சாம்சனுக்கு" வேலை இல்லை என்பதும் இந்த செய்தியின் சுருக்கம்…..

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...