தயாநிதியை நெருங்கும் சி.பி.ஐ.!

 "பி.ஜே.பி.யை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம்" என்று ஜனவரி 8-ம் தேதி பொதுக்குழுவில் பேசினார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக சத்தமில்லாமல் இருந்த தயாநிதிமாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு பி.எஸ்.என்.எல்.இணைப்பு கொடுத்த வழக்கு… ஜனவரி 21-ம் தேதி இரவு சன் டி.வி. ஊழியர்கள் கைது நடவடிக்கையால் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்வதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
தயாநிதிமாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்த விவகாரத்தில் முதல்கட்டமாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் கௌதமன் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து சன் டி.வி.யின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் எஸ். கண்ணன் மாற்றும் எலக்ட்ரீசியன் ரவி ஆகியோரையும் சி.பி.ஐ. கைது செய்தது.

கைது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த தயாநிதிமாறன், அடுத்த நாள் காலையிலேயே தாத்தா கலைஞரை கோபாலபுரம் வீட்டுக்கு ஓடிச் சென்று சந்தித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். தகவலறிந்த பத்திரிகையாளர்களும் கலைஞர் வீட்டில் குவிந்து விட, கோபாலபுரம் வீட்டிலேயே பிரஷ்சையும் சந்தித்தார் தயாநிதி.

"கடந்த 8 ஆண்டுகளாக இந்தவழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடைசி 18 மதங்களில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் விசாரணைக்காக 10க்கும் மேற்பட்ட முறை டெல்லி சென்றுள்ளனர். அப்போதெல்லாம் சி.பி.ஐ. அவர்களைக் கைது செய்யவில்லை. இப்போது திடீரென்று கைது செய்யப்பட தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகரே காரணம்.

தமிழகத்தில் உள்ள அந்த ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவியைத் திருப்திப்படுத்தவே எனது உதவியாளர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். முதல் கட்டத் தகவல் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாய் தொலைபேசிக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த வாய்ப்பளித்தால் செலுத்தி விடுவேன். எனவே இது ஒரு சிவில் வழக்கு. ஆனால் சன் டி.வி.யை இந்த விவகாரத்தில் இழுத்தால்தான் குற்றவியல் வழக்காக மாற்ற முடியும் என்பதால் இந்த வழக்கில் சன் டி.வி.யைச் சேர்ந்தவர்களையும் கைது செய்துள்ளனர். ஆனால் எனக்கும் சன் டி.வி.க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

கைது செய்யப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தி எனக்கு எதிராக வாக்குமூலம் பெற சி.பி.ஐ. முயற்சிக்கிறது. எனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தால் அவர்களை விட்டுவிடுவதாகவும் அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்" என்று சி.பி.ஐ. மீது அடுக்கடுக்காக தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார்.

மேலும் தொழில்நுட்ப ரீதியாக வீட்டில் வைத்து டெலிபோன் எக்சேஞ்ச் நடத்துவது சாத்தியமில்லாத விஷயம் என்றும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யப்பட மூன்று பேரும் 22-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை எதிர்பார்த்தே சன் டி.வி.யின் முக்கியத் தலைகள் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டன. எனினும் கைது செய்யப்பட்டவர்கள் யாரிடமும் அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. 3 பரையும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தயாநிதிமாறனை நோக்கி சி.பி.ஐ. நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 4,6 மற்றும் 9-ம் தேதிகளில் ஆடிட்டர் குருமூர்த்தி இந்தியன் எக்ஷ்பிரஷ் நாளிதழில் தொடர்ந்து 3 கட்டுரைகள் எழுதினார். அந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட சாராம்சம்…
கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, சன் டி.வி.யின் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்டு வந்தது. அந்த சமயத்தில் தயாநிதிமாறனின் அடையார் போட் கிளப் வீட்டில் இருந்து சன் டி.வி.க்கு அதிவிரைவு பி.எஸ்.என்.எல். இணைப்பு ரகசியமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தயாநிதிமாறன் வீட்டில் இருந்து கண்ணாடி இழை கேபிள் சன் டி.வி. அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்றே ரகசியமாக ஒரு டெலிபோன் எக்சேஞ்ச் தயாநிதிமாறன் வீட்டில் செயல்பட்டு வந்திருக்கிறது. அதன்மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் வீடியோ மற்றும் ஆடியோக்களை மின்னல் வேகத்தில் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சன் டி.வி அந்த இணைப்பை பயன்படுத்தியுள்ளது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் முறைகேடான இந்த இணைப்புகள் பி.எஸ்.என்.எல். ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும், பி.எஸ்.என்.எல். சென்னை மண்டல தலைமைப் பொதுமேலாளர் பெயரில் இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் கட்டுரையில் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரைக்காக குருமூர்த்தி மற்றும் இந்தியன் எக்ஷ்பிரஷ் நாளிதழ்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகச் சொன்னார் தயாநிதிமாறன்.

ஆனால், 'வெல்கம் தயாநிதிமாறன்' என்று குருமூர்த்தி மீண்டும் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட, தயாநிதிமாறன் அப்போதைக்கு அமைதியாகிவிட்டார். பின்னர் குடும்பப் பிரச்னை காரணமாக தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு அமைச்சர் பதிவியில் இருந்து விலகினார். தொடர்ந்து மீண்டும் 2009-ம் ஆண்டு அவர் ஜவுளித்துறை அமைச்சராக… சி.பி.ஐ. அமைதியாகி விட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் குருமூர்த்தி அமைதி காக்கவில்லை.
2011,12-களில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்த குருமூர்த்தி, சன் டி.வி.க்கு பி.எஸ்.என்.எல். இணைப்பு வழங்கப்பட்ட வழக்கில் சுணக்கம் காட்டப்படுவதாகக் கூறியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்டாப் ஆலம், ரஞ்சனா தேசாய் ஆகியோரிடம் விசாரணைக்கு வந்தது. குருமூர்த்தி தம்மிடம் இருந்த ஆதாரங்களையும் மனுவுடன் இணைத்து அனுப்பியிருந்தார். சன் டி.வி. அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள 323 இணைப்புகளில் இருந்து 630 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்று கணக்கிடப்பட்டு 440 கோடி ரூபாய் பி.எஸ்.என்.எல்.லுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த இணைப்புகள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவே சாதாரணமாகத் தெரியவும். ஆனால் மறைமுகமாக அது சன் டி.வி.க்காக உபயோகப்படுத்தபட்டிருக்கும். இதே போன்ற இணைப்பு சன் குழுமத்துக்கு சொந்தமான தினகரன் நாளிதழ் மதுரை பதிப்புக்கும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பிரம்மநாதன், பொதுமேலாளர் எம்.பி. வேலுசாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதோடு சன் டி.வி.யின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர்தான் இதனை அமைத்துக் கொடுத்ததாகவும் சி.பி.ஐ.யிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதல் கைது நடவடிக்கையாக, இந்த இருவருடன், தயாநிதியின் தனிச் செயலராக இருந்த கௌதமன் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, திட்டமிட்டே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கை தயாநிதி மாறன் சட்டப்படி சந்திப்பார் என்றும் அறிவித்துள்ளார்.

அதுபோல ஜி.கே. வாசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் திடீர் கைது நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கைது நடவடிக்கையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அதிமேதாவி இருக்கிறார் என்ற தயாநிதிமாறன் குற்றச்சாட்டை ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.

"தொலைத் தொடர்பு மேலாளர் பெயரில் தனி இணைப்புகளாக அமைக்கப்பட்டு அது சன் டி.வி.க்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து முதல் தகவல் அறிவிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது தொடரப்பட்ட வழக்கு இது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறுவது அர்த்தமற்றது. ஆர்.எஸ்.எஸ்ஷூக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளார் குருமூர்த்தி.
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி தன் கருத்தை கூறியுள்ள பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.

"தயாநிதிமாறன் செய்தியாளர்களிடம் தாம் குற்றமற்றவர் என்று கூறுவதை விட நீதிமன்றத்தை அணுகுவதே சரியானதாக இருக்கும். இந்த விஷயத்தில் அவர் தவறு செய்துள்ளது ஆதாரபூர்வமாக உள்ளது. அவர் தப்ப முடியாது" என்று கூறியுள்ளார்.

தயாநிதிமாறனைக் காப்பாற்றுவதற்காக வேறு அஷ்திரங்களை ஏவியிருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அஷ்திரத்தை மாறன் ஏவியிருப்பதால் டெல்லியின் பதிலடி கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது!

நன்றி : அரசியல்
– எம்.குமரேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...