செல்போன்வழி நிர்வாகத்தை (எம்-கவர்னன்ஸ்) ஊக்குவிக்கும் வகையில், செல்போன் மூலம் அதிகப்படியான சேவைகளை வழங்குவதற்கான வழிகளை ஆராயுமாறு தகவல் தொழில்நுட்ப (ஐடி) வல்லுநர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இணையவழி நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) குறித்த 18-வது தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. முன்னணி ஐடி நிறுவன பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக பிரதமர் மோடி ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவேற்றம் செய்த அடுத்தடுத்த கருத்துகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக அரங்கத்தில் பெரிய திரை பொருத்தப்பட்டிருந்தது. அப்போது மோடி கூறியதாவது:
செல்போன் மூலம் என்னென்ன சேவைகளை வழங்கமுடியுமோ அதை எல்லாம் வழங்கு வதற்கான அனைத்து வழிகளையும் ஐடிதுறை வல்லுநர்கள் ஆராயவேண்டும். மொத்தத்தில் உலகத்தை நமது செல்போனுக்குள் கொண்டுவந்து விட வேண்டும்.
நாட்டை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் என்பது எனது கனவு. இதன் ஒரு முக்கியபகுதிதான் இணைய வழி வணிகம். இணைய வழி வணிகம் என்ற உடனேயே முதலில் செல்போனைத் தான் மனதில் கொள்ள வேண்டும். எனவே, செல்போன் வழி நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் செல்போன் வழி நிர்வாகம் பிரபலமாகும்.
நிர்வாக நடைமுறைகளில் தொழில் நுட்பத்தை அதிகளவில் புகுத்தினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பல்வேறு பணிகளை நிறை வேற்றுவதற்கு உள்ள தடைகளை தகர்த்தெரிய தொழில் நுட்பமும் இணைய வழி நிர்வாக நடைமுறையும் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.