1)வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் 3500 கோடி முதற்கட்டமாக மத்திய அரசின் வருமான வரி துறையினரால் கைப்பற்ற பட்டுள்ளது
2)இலங்கை கடற்படை சிறை பிடித்த படகுகள் விடுவிப்பு .இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் ஒருவரும் இல்லை.மீனவர்கள் மீதான தாக்குதல் கைது அடியோடு நிறுத்தம்.மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!
3)வங்கிகளுக்கான ரேபோ ரேட் விகிதம் 0.25%(ரேபோ ரேட் =7.75%) குறைந்துள்ளது.இதன் மூலம் குறைந்த வட்டியில் வீட்டுகடன்,வாகன கடன் பெறலாம்
4)விவசாயிகளுக்கு சாயில் ஹெல்த் கார்ட் வழங்க 568 கோடி ஒதுக்கீடு
5)பெட்ரோல் டீஸல் விலை தொடர்ந்து குறைப்பு
6)நாடு முழுவதும் பதட்டமான இடங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்கு 50 ஆயிரம் குண்டு துளைக்காத கவசங்கள் (Bullet Proof Jacket) உடனடியாக கொள்முதல் செய்து, ராணுவ வீரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டிருக்கிறார், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்.
7)52 அத்யாவசிய மருந்துகள் விலை குறைப்பு
8)பணவீக்கம்(wholesale inflation) பூஜ்யத்தை எட்டியுள்ளது
9)நஷ்ட்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா லாபத்தில் இயங்க ஆரம்பமாகியுள்ளது
10)ஜன்தான் யோஜனா திட்டம் (5000 கடன் வசதியை கொண்ட வங்கி கணக்கு திட்டம்) கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது
11)இலங்கையில் இந்திய உளவுத்துறையான ரா மூலம் ராஜபக்ஷேவை வீழ்த்தியது
12)தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினரின் கொட்டத்தை அடக்க எல்லையில் ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம்
13)கங்கை ஆற்றில் தேவை இல்லாத கழிவுகள் கலப்பதை தடுக்க தடுப்பு அமைக்க 1500 கோடி ஒதுக்கீடு
14)காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலகரி ஊழல் குறித்து மேலும் 17பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணையை துரிதபடுத்த திட்டம்
15)கனரக வாகனங்களுக்கு அப்ப்ரூவல் வழங்க (e-approval) திட்டம் ஆரம்பம்
16)விப்ராட் குஜாராத் மாநாட்டில் இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
17)சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் இழப்பீடு
18)மறைமுக வரிவிதிப்பில்(INDIRECT TAX) உள்ள இடர்பாடுகளை தடுக்கவும் ஊழல்களை களையவும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா
19)இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் லேசர் சுவர் அமைக்க மதிய அரசு முடிவு
20)வேலை வாய்ப்புகளை அதிகரிக்க,அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டம் சென்றடைய இன்சூரன்ஸ் மசோதா
21)ராணுவம் விழிப்புடன் செயல்பட்டதால் குஜராத் எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தான் படகு தடுக்கப்பட்டது.இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மும்பை தாக்குதலை போல அசம்பாவிதங்கள் நடக்கவில்லை
22)சமயல் எரிவாயு திட்டத்திற்கான மானியத்தை வங்கி கணக்குகளில் வழங்குவதன் மூலம் வங்கிகளில் பண புழக்கம் அதிகரித்ததோடு மட்டும் அல்லாமல் பல சட்டவிரோதமான சமையல் எரிவாயு இணைப்புக்கள் துண்டிப்பு
23)ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து வசதிகளை கொண்ட ஸ்மார்ட் காவல் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு
24) கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பென்சன் தொகையின் மதிப்பு 27000 கோடி..மோடி அரசு தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை காங்கிரஸ் அரசை போல இழுத்தடிக்காமல் வழங்கியுள்ளது தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
25)சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் காரர்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பட்டுள்ளது
26)பொருளாதார வளர்ச்சியை பெருக்க வங்கித்துறையை மேம்படுத்த மோடி அரசு முடிவு
27)சூரிய வழி மின்சார உற்பத்தியை அதிகரிக்க நூறு அமெரிக்க பில்லியன் டாலர்களை 2022ஆம் ஆண்டிற்குள் முதலீடு செய்ய மத்திய அரசின் முடிவின் மூலம் விவசாயிகள் நலன் காக்கபடுவதில் தாமதம் ஏற்படாமலும் அதே நேரத்தில் வளர்ச்சியை பெருக்கவும் நிலம் கையகபடுதுதல் மசோதா
28)தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உயிருடன் பத்திரமாக நாடு திரும்ப செய்தது
29)அரசு பணிஇடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது
30)அனைத்து பா.ஜ.க எம்பிக்களும் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட செய்தார் மோடி
31) "Juvenile Justice Act" என்ற சட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம் பதினாறு வயதிற்கு மேல உள்ள யாரையும் கொலை,கற்பழிப்பு,ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களுக்கு தண்டிக்கலாம்.
32)பழம்பெரும் திட்டமான ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவு கட்டி நிதி ஆயாக் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது (இது மாநில முதலமைச்சர்களை ,யூனிய பிரதேச ஆளுநர்களை உள்ளடக்கியது).
33)மத்திய அமைச்சர்களின் விமான சொகுசு பயணம் (FIRST CLASS TRAVEL)ரத்து.ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் தங்கவும் தடை.வெளிநாடு செல்வதற்கு முன்பு பிரதமரிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்
34)திட்டமிடாத செலவுகளையும் பத்து சதவீதம் குறைக்க மோடி அரசு இலக்கு வைத்து செயல் படுகிறது
35)வடகிழக்கு மாநிலங்களையும் தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வர இந்த நிதியாண்டில் 50000 கொடி ஒதுக்கப்பட்டது ."அருண் பிரபா " என்ற விளையாட்டு பல்கலைகலகத்தையும் ,தரமான சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் முடிவு
36)"make in india" என்ற திட்டத்தின் மூலம் பல தொழிற்சாலைகளை உருவாக்கி,வேலை வாய்ப்பை பெருக்கவும் ,ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடிவு
37)வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க 5111 கோடி மதிப்பில் மின்சார திட்டங்களை செயல்படுத்த முடிவு
38)கடந்த ஆட்சி போல நிலகரி விவகாரத்தில் ஊழல் ஏற்படாமல் தடுக்க ,நிலகரி ஏலத்தை மிகவும் வெளிபடையாக நடத்த முடிவு
39)யோகாசனம் ,ஆயிர்வேதம் போன்றவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல "ஆயுஷ் அமைச்சகம்" உருவாக்கப்பட்டுள்ளது
40)டிஜிட்டல் புரட்சி :–ஈ-கிராண்டி (e-kranti) என்ற திட்டத்திற்கு 113000 கோடி பணம் செலவு செய்ததன் மூலம் கல்வித்துறை,பொது சேவை,அதிகாரத்துவம் போன்ற அனைத்தையும் ஆன்லைன் மயமாக்க திட்டம்
41)சென்னை –டில்லி இடையே புல்லட்ரயில் செயல்படுத்த முடிவு .மும்பை- ஆமெதாபாத் இடையே புல்லட்ரயில் செயல்படுத்த முடிவு.
42)ராணுவ அமைச்சராக பதவியேற்ற உடனே 15750 கோடி ரூபாய் செலவில் 814 பீரங்கிகள் வாங்கும் திட்டத்திற்கு கையோப்பம் இட்டார் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்
43)யோகாவை தனிப்பாடமாக ஜூன் 2015 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு
44)பா ஜ க எம்.பி தருண் விஜய்-ன் கோரிக்கை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி உத்தரவில் திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
45) "தூய்மையான பாரதம்" என்ற பேரில் நாடு முழுவதும் தெரு வீதிகளை கூட்டி சுத்தப்படுத்தும் பணி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது
46) சீன பட்டாசுகளுக்கு நிரந்தர தடை விதித்து உள்ளூர் பட்டாசு உற்பதியார்களுக்கு உதவி
47) மானியமில்லாத சமையல் எரிவாயு விலை 21 ரூபாய் குறைக்கப்பட்டது
48) வீட்டு காஸ் சிலிண்டர் வருடத்திற்கு 12 எந்த நேரமும் எத்தனைவேண்டுமானாலும் வாங்கலாம் மாதம் 1 தான் என்கிற கட்டுப்பாடு இனி இல்லை என்றநிலையை கொண்டு வந்து சமயம் எரிவாயு மீதான தடையை நீக்கியது
49) குறைந்தபட்ச ஊதிய உயர்வை 1000 ரூபாயாக உயர்த்தியது
50) ஆட்சிக்கு வந்த முதல் நாளே வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புபணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது .இந்திய வரலாற்றில் முதல் முறையாக கருப்ப பணம் வைத்துஇருபவர்களின் ஒரு சில பேர்களை வெளியிட்டது .அனைத்து பெயர்களையும் உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது
51) ஆராய்ச்சி துறைகளில் இந்தியா –இஸ்ரேல் கூட்டு சேர்ந்து செயல்பட முடிவு
52) நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் நூறு பெரும் நகரங்களை உருவாக்குவது .தமிழகத்தில் பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி
53) கங்கை சுத்தப் படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை .,மூன்று ஆண்டுகளில்கங்கை முழுவதும் சுத்தப்படுத்தப்படும் என்று நீர்வள துறை அமைச்சர் உமாபாரதிவாக்குறுதி
54 ) வைர நாற்கர அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை
55) எம்.பி க்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளை துரிதப் படுத்தி விசாரிக்க உத்தரவு
56) வருமான வரி உச்ச வரம்பை இரண்டில் இருந்து இரண்டரை லட்சமாக ஏற்றியது
57) சீனாவுடன் எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை.சீன ஊடுருவலைதடுக்க அருணாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் அதிகமான மக்கள் குடியேற்றம்
58) அனைத்து மாநிலங்களிலும், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,கள் போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் அமைக்க முடிவு .முதல் கட்டமாக ஐந்து மாநிலங்களில்ஐ.ஐ.டி.ஐந்து மாநிலங்களில் ஐ.ஐ.எம்.ஐந்து மாநிலங்களின் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்நிறுவும் பனி தொடக்கம்
59) பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடிவு
60) ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில், உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்படும். பயங்கரவாதி களின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு, காஷ்மீர்பண்டிட்கள், அவர்களின் சொந்த ஊரில், குடியேற நடவடிக்கை எடுக்க முடிவு .மத்திய அரசின் உத்தரவை ஏற்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஅனைத்து காஷ்மீர் பண்டிட் அகதிகளையும் மீள் குடியேற்றம் செய்ய அழைப்பு
61) வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துகளை உருவாக்கும் துறைகளில், நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்க முடிவு
62) புதிய மின்சாரக் கொள்கை அமல்படுத்த முடிவு
63 )சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
64) 50 சுற்றுலா தளங்களை உள்ளடக்கிய வளையம் ஏற்படுத்த முடிவு
65) ஊழல் மற்றும் கருப்புப் பண அபாயம் ஒழித்துக் கட்ட முடிவு
66) ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர்' என்ற நோக்கில், 'பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்' என்ற புதிய திட்டம், செயல்படுத்தப்படும்
67) இளைஞர் மேம்பாட்டு திட்டம் என்பது மாற்றப்பட்டு, 'இளைஞர்களேவழிநடத்தும் மேம்பாட்டு திட்டம்' கொண்டு வரப்படும். அதன் மூலம், நிறைய 'ஆன் – லைன்' படிப்புகள் நடத்த முடிவு
68) விளையாட்டு வீரர்களைஇனம் கண்டுபிடிக்க, தேசிய அளவில், திட்டம் கொண்டு வரப்படும். புதிய தேசியசுகாதாரக் கொள்கை உருவாக்க முடிவு
69) தேசிய சுகாதாரகாப்பீட்டுத் திட்டம்அறிமுகம் செய்யப்படும்.'குப்பை இல்லாத நாடு' என்றநோக்கில், புதிய திட்டம் அமல்படுத்த முடிவு
70)) பெண்கள் பாதுகாப்பு மற்றும் -பெண்கள் கல்வி' என்ற புதிய முழக்கத்தோடு, பெண்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு
71) அதிகாரிகள் மத்தியில், நம்பிக்கை ஏற்படுத்தவும், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுஆவணங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்க முடிவு
72) மழைநீரைச் சேமிக்கவும், சாத்தியம் உள்ள நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு
73) விடுதலை புலிகள் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி விதித்துள்ளஐந்தாண்டு தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில்குழு அமைத்தது
74) முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாமுதல்வர் உமன் சாண்டி வற்புறுத்தலையும்மீறி கண்காணிப்பு குழு அமைத்துதமிழத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
75) வட கிழக்கு வறட்சி மாநிலங்களை பசுமை நிறைந்த மாநிலங்ககளாக மாற்ற ,ஓடிஸா,பீகார்,மேற்குவங்கம்,கிழக்கு உத்தர் பிரதேசம் போன்ற மாநிலங்களை விவாசய சந்தையாக மாற்ற ,லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மத்திய அரசுதீவிர நடவடிக்கை
76) பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதனுக்கு தேவைப்படும் 50 அத்யாவசிய மருந்துகளை அனைவருக்கும் இலவசமாக கொடுக்க திட்டம்
77) இராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட நர்சுகளை ஒரு கீறல் கூட விழாமால்எந்த நாட்டில் உதவியும் இன்றி தீவிரவாதிகளிடம் நேரடியாக பேச்சு வார்த்தைநடத்தி மீட்டது
78) பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்கhttp://mygov.nic.in/என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
79) தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மட்டும் வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க எம்பி போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தனது தொகுதிக்கு புதிய சாலையைஉருவாக்க ,பழைய சாலைகள சீரமைக்க கேட்டுகொண்டதன் பேரில் அந்த தொகுதியில்சீரமைப்பு மற்றும் புதிய சாலையை உருவாக்கும் பணிகள் நடை பெறுகிறது
80) தமிழ்நாட்டை புறக்கணிக்காமல் ரயில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 1,233 கோடி ஒதுக்கப்பட்டது .சென்னை ரயில் நிலையத்தில் இலவச wifiவசதி மத்தியரயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடாவால் தொடங்கப்பட்டது
81) வட கிழக்கு மாநில ரயில்களுக்கு wifiஇன்டர்னட் வசதி
82) குமரியில் பேர் மருத்துவ சிகிச்சைக்கு பிரதமர் நிவாரண நிதியில்இருந்து ரூ6.50 லட்சம் தமிழக பா.ஜ.க தலைவர் பொன்னர் பெற்று தந்து உள்ளார்
83) தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி இஸ்லாமிய மதராசாக்களை நவீனபடுத்த ரூ100 கோடி ஒதுக்கீடு
84) சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை.
85) விவசாய கடன்கள் வழங்க, எட்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
86) இந்திய உணவு கழகத்தை சீரமைக்கவும் முடிவு.
87) நிலமற்ற விவசாயிகள், ஐந்து லட்சம் பேருக்கு நபார்டு கடனுதவி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
88) அனைத்து மாநிலங்களிலும், உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என, அறிவிப்பு
89) வறட்சி பாதிப்பிற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
90) நீர் பாசன வசதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
91) இராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்றாலும் சமையல் எரிவாயு ,மண்ணெண்ணெய் விலை உயார்த்தாமல் பார்த்து கொண்டது
92) வங்கதேசத்தோடுவிசா முறைகளை கடுமையாகிய இந்திய அரசு..இனி சட்டவிரோத குடியேற்றங்களும்,ஊடுருவல்களும் இருக்காது
93) பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை அரசு செலவில் புதிய கார்கள் வாங்க தடை விதித்தார்.
94) சட்டத்தை மதிக்காமல் ஆட்டம் போட்ட அம்பானி கூட்டத்திற்கு 578 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது
95) டில்லி ஆக்ரா இடையே அதிவேக செமி புல்லட் ரயில் சோதனை வெற்றி வேகம் 160KM/H
96) இந்திய விமான படையை வலிமையாக்கும் 56 புதிய விமானங்கள் வாங்கியது
97) வருமான வரி வரம்பை 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தியது
98) ப்ரீமியம் பெட்ரோல் விலை ரூ 5 குறைந்தது
99) காசநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 2 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்துவங்கப்படுகிறது. இதில் ஒன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும்மற்றொன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும்அமைக்கப்படுகிறது.
100) தூத்துக்குடியில் வெளிவிட்ட துறைமுக திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.11 ஆயிரத்து 635 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
101) தேசிய புராதான நகர மேம்பாடு மற்றும் அதிகரித்தல் திட்டம்அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில்மதுரா, அமிர்தசரஸ், கயா, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் அஜ்மீர் ஆகியநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
102) சூரிய ஒளியில்இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க அல்ட்ரா மெகா சோலார் பவர்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
103) புதுவை வெள்ளம், புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க புதுச்சேரிக்கு ரூ.188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
104) ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த 6 ஜவுளி குழுமங்கள்அமைக்கப்படுகிறது. அவை பரேலி, லக்னோ, சூரத், கட்ச், பகல்பூர், மைசூர்மற்றும் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன.
105) முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
106) கிராமங்களில் விவசாய விளைப்பொருள்களைச் சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கல்
107) குட்கா, பான்மசாலா,சிகிரட் மற்றும் மெல்லக்கூடிய புகையிலை,
108) ஜர்தா வாசனை சேர்க்கப்பட்ட புகையிலை சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விலை உயர்த்தியது
109) வீட்டுக்கடனுக்கான வரிச் சலுகை ரூ.1½ லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
110) பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நாடுமுழுவதும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இரண்டரை லட்சம் கோடி நிதிஒதுக்கீடு, நிலம் இல்லாத ரூ.5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம்கடன் உதவி, கிராமங்களில் மின் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வசதிநீடிப்பு, ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு, சென்னை மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் காச நோய்சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்
111) ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்… போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு!
112) விவசாயிகளுக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சி 'கிஸான்'!
113) நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
114) தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம் 11000 கோடி ஒதுக்கீடு
115) வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ரூ. 2 லட்சம் வரை வரி விலக்கு!
116) வரி குறைப்பு: எல்சிடி, எல்இடி, கலர் டி.வி., பிரிட்ஜ், டெஸ்க்டாப், மடிக்கணினிகள், டேப்லட் கணினிகள், சோப்பு, ரூ.500 முதல் ரூ.1,000வரை, ஆர்ஓ அடிப்படையிலான தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனங்கள்,
எல்இடி விளக்குகள், மின்விளக்குகள்,விளையாட்டுக் கையுறைகள்,தீப்பெட்டி,
டிடிடி பூச்சிமருந்துகள்,ஹெச்ஐவி/ எய்ட்ஸ் மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் சாதனங்கள் விலை குறைந்தது
117) நாட்டில் உள்ள கிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
118) தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
119) வருமான வரிச்சட்டத்தின் 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின்கீழான முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்குச் சலுகை, தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
120) குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
121) வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டுவரும் உடைமைகளுக்கான வரிவிலக்குஉச்சவரம்பு ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரமாக உயர்த்தப்படும்.
122) ஹிமாசலப் பிரதேசம், பிகார், பஞ்சாப், ஒடிஸா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஐஐஎம்கள் தொடங்கப்படும்.
123) ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 5 ஐஐடி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
124) மத்திய அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் நரேந்திர மோடி அரசு அதிரடி உத்தரவு
125) பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு முதற்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கு ப்ராட்பாண்ட் இன்டர்ன்ட்வசதி ,அரசு துறை சேவைகள் இணையதள மையம் ,இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பபயிற்சி
126) கைத்தறி நெசவாளர்களின் நேசவுகளை ஆன்லைனில் விற்க FLIPKART இணையதளத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்
127) பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தாங்கள்விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் பெறும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தஉள்ளது
128) தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில், இரண்டு சபைகளிலும், 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
129) தமிழக விவசாயிகளின் நலன் என்றுமே காக்கப் படும் – இது மோதி சர்கார். .தமிழகம் முழுவதம் 49 ஏரிகளை சீரமைக்க 300 கோடி ஒதுக்கீடு
130) சுதந்திர தின உரையில் மோடி அவர்கல் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்கள்பள்ளிக்கும் கழிப்பறை கட்ட படும் என்று அறிவித்த மாதிரதிலயே பல கார்பரேட்நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதியுதவி
131) பொருளாதாரநெருக்கடியால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும்பள்ளியில் சேர்ந்து Ph.dவரை படிக்க மத்திய அரசு உதவி செய்யும் திட்டம்அறிமுகம்
132) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிஎதிர்ப்புப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் கமோர்த்தாவை மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் அருண் ஜேட்லி இன்று முறைப்படி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.
133) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மேற்பார்வை குழு அமைத்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தி
விவசாயிகளின் துயர் துடைத்த பிரதமர் மோடி க்கும் ,தொடர்ந்து வலியுறுத்தி சாதித்து காட்டிய பொன் ராதா கிருஷ்ணன்
134) கன்னியாகுமரி -கிளியகாவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 13.29 கோடி ஒதுக்கீடு செய்து பணிகை துவக்கிய பொன்.ராதாகிருஷ்ணன்
135) காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்துஉள்ளது
136) நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மோடி ஆட்சியில்பாதுகாப்பாக இருகிறோம் என்று 76%மக்கள் இந்தியா டுடே கருத்து கணிப்பில்தெரிவித்து உள்ளனர்
137) இந்திய எல்லையில் சோழர் தகடுகள்அமைத்து மின்சார உற்பத்தியை பெருக்கவும் வெளி அமைக்கவும் திட்டம் .இதன்மூலம் அதிக அளவு டீஸல் பயன்படுத்தப் படும் ராணுவத்துக்கு 1000 mw மின்சாரத்தை ஒரு யூனிட் 5.50 ரூபாய் என்ற வீதம் 25 ஆண்டுகளுக்கு வழங்கமுடிவு
138) மாவோயிஸ்ட் பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஏற்படுத்துவதன் மூலம் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் அடியே நிறுத்தம்
139) . 2019 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்,தொலைதொடர்ப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 69500 கோடி ஒதுக்கீடு
140) ஆர்.டி.வோ அலுவுலகங்களில் லஞ்சம் முத்திபோய்உள்ளதால் அந்ததிட்டத்தையே அறவே ஒலித்து அதற்க்கு இணையான மற்றஒரு திட்டத்தை செயல் படாதுபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கத்காரி முடிவு
141) மானியம்இல்லாமல் சமையல் எரிவாயு வாங்க வசதி இல்லாதவர்கள் தாங்களாகவே முன்வந்துதங்கள் மானியத்தை ரத்துசெய்து ,அந்த பணத்தைஏழை மக்கலின் சிலிண்டர்களுக்குமானியம் வழங்க மத்திய அரசு முடிவு
142) அரசின் பல்வேறுதிட்டங்களில் உறுதிமொழி ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் பொதுமக்களுக்கு உள்ளஅலைச்சலை, செலவைக் குறைக்கும் வகையில் இனி சுயசான்று ஆவணங்களை தாக்கல்செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும்படி மத்தியஅரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
143) 91000MW மின்சார உற்பத்தி சம்பந்தப்பட்ட பணிகள் கடந்த அரசால் தேக்கம்.அதனை துரிதப்படுத்தி நடத்த மத்திய அரசு முடிவு
144) நாட்டின் பாதுகாப்புக்கும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க ஏராளமான ஆயுதங்கள் 80000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு
145) ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குதல் ,இஸ்ரேல் நாட்டிடம் இருந்து 8000 ஏவுகணைகள் ,12 கண்காணிப்பு விமானங்கள் வாங்க முடிவு
146) சீன ஊடுருவலை தடுக்க 54 ராணுவ முகாம்களையும் , உள்கட்டமைப்பு வசதிகளை சீன எல்லையில் மேம்படுத்த 175 கோடி ரூபாய் பணமும் ஒதுக்கீடு
147) பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மக்களுக்கு மேலும் 745 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.(தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடனும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கொண்டாடினார்
148) தகவல் உரிமை அறியும் சட்டம் சம்பந்தமான தகவல்களை ஆன்லைனில் கொண்டுவந்துள்ளது மத்தியஅரசு
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.