எங்களது பணிகள் தான் அனைத்தையும் விடச் சிறந்தது என நினைக்கும் அளவுக்கு நாங்கள் கர்வம் பிடித்தவர்கள் அல்லர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முந்தைய சட்டத்தில் இடம் பெற்றுள்ள தவறுகளைச் சரி செய்வதற்கு, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பேசியதாவது:
எங்களது பணிகள் தான் அனைத்தையும் விடச் சிறந்தது என நினைக்கும் அளவுக்கு நாங்கள் கர்வம் பிடித்தவர்கள் அல்லர். 2013ஆம் ஆண்டு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நீங்கள் (காங்கிரஸ்) இயற்றியபோது, உங்களுக்கு தோளோடு தோளாக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். அந்த விவகாரம் மூலம், அரசியல் ரீதியில் நீங்கள் ஆதாயம் அடைய முற்படுவீர்கள் என்பது தெரிந்தும், உங்களை நாங்கள் ஆதரித்தோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது, வளர்ச்சியையும், உள்கட்டு மானத்தை புதிதாக ஏற்படுத்து வதையும் பாதிக்கும் என்று அனைத்து மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போல், ராணுவ வளர்ச்சித் திட்டம், அணுசக்தி உள்கட்டமைப்பு பணிகளுக்கு அந்தச்சட்டம் இடையூறாக இருக்கிறது என்று பாதுகாப்பு படையினரும் எதிர்த்தனர். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களும் ஒரே குரலில், இதைத்தெரிவித்தனர்.
கூட்டாட்சி அமைப்பில் மாநில முதல்வர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு செயல்படும் வகையில், நாங்கள் அத்தனை கர்வம் பிடித்தவர்களா? விவசாயிகளின் நலன்களை எங்களால் புறக்கணிக்க முடியுமா? தவறு ஏதாவது இருக்கும் பட்சத்தில், அதைச் சரிசெய்ய வேண்டியது நமது பொறுப்பில்லையா?
எதை நீங்கள் செய்தீர்களோ, அதை நாங்கள் நிராகரிக்கவில்லை. அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலேயே, இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளோம்.
இதனால் விவசாயிகள் பெரிதும் பலனடைவர். இந்த மசோதாவில் ஏதேனும் குறைகள் இருப்பின் மேலும் திருத்தங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.
இதை உங்களது கௌரவ பிரச்னையாக கருதவேண்டாம். முந்தைய சட்டத்தில் இருக்கும் தவறுகளை சரிசெய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம்செய்வதன் மூலம், அரசியல் ரீதியில் ஆதாயம் அடையும் திட்டம் எதுவும் என்னிடம் கிடையாது. நாட்டின் நலனை கருத்தில்கொண்டே நான் செயல்பட்டு வருகிறேன்.
1894-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலம்தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளின் அவலநிலை 2013ம் ஆண்டுதான் காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? எனது அரசு, "அனைவருக்காகவும், அனைவருக்கும் வளர்ச்சி' என்பதற்காக பணியாற்றிவருகிறது. எனது இந்த முயற்சிக்கு, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
சில விஷயங்களில் எனக்கு போதிய அறிவு இல்லை என நீங்கள் தெரிவிக்கலாம். ஆனால், எனக்கு குறைந்தபட்சம் அரசியல் அறிவுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமானது, உங்களது (காங்கிரஸ்) தோல்விகளுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். அப்படி இருக்கையில், அந்தத் திட்டத்தை எப்படி நான் ரத்து செய்வேன்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தொடர்ந்து கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் செயல்படுத்தப்படும். நாடு சுதந்திர மடைந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும், வலுக் கட்டாயமாக ஏழைகளை பூமியில் குழிதோண்ட வைக்க நீங்கள் கொண்டு வந்ததிட்டம் அல்லவா அது? இருப்பினும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்துவோம்.
கருப்புப்பண பதுக்கலில் ஈடுபட்டுள்ள யாரும், அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கமுடியாது. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தாங்கள் பழிவாங்கப் பட்டுவிட்டோம் எனத்தெரிவிக்கும் நிலை வராது. இந்த விவகாரத்தில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம்.
கருப்புப்பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 3 ஆண்டுகளாக அந்தக்குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதலில் மேற்கொண்ட நடவடிக்கையே சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்ததுதான்.
நமது நாட்டை ஊழல் சிதைத்துவிடும். இந்த அச்சுறுத்தலை கையாளும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.