பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தர விட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
விஜயாப்புரா-கலபுரகி மற்றும் மது கிரி-கவுரிபித்தனூர் இடையே இரண்டு தேசிய நெடுஞ் சாலைகளை மேம்படுத்தும் பணி தொடக்கவிழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்தவிழாவில் மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
திட்டங்களை செயல்படுத்த நிதி பற்றாக் குறை இல்லை. நிலம் எடுப்பு, கச்சாபொருட்கள் கொள்முதல் போன்றவற்றால் திட்டங்களை செயல் படுத்துவதில் தாமதம் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தரைவழித் துறை பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியகாரணம் நிலம் எடுக்கும் பணி. இந்த நில பிரச்சினையால் ரூ.3.89 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் முடங்கியுள்ளன.
அரசுதனியார் பங்களிப்பு திட்டங்களுக்கு அதிகவரவேற்பு கிடைக்கவில்லை. முன்பு ஒவ்வொரு நாளும் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வந்தது. நாங்கள் ஆட்சிக்குவந்த பிறகு இதை 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளோம். வரும் காலங்களில் அனைத்து சாலைகளும் சிமெண்டு கான்கிரீட் சாலைகளாக மாற உள்ளது. குறைந்தவிலையில் சிமெண்டு வழங்குமாறு சிமெண்டு உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நம்மிடம் அதிகளவில் உள்நாட்டு நீர் வழி போக்கு வரத்து வசதி இருந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்த வில்லை. நீர் வழி போக்கு வரத்துக்கு குறைவான செலவு ஆகிறது. சீனா, கொரியா, ஐரோப்பிய நாடுகளில் நீர் வழி போக்கு வரத்து அதிகமாக உள்ளது.
மும்பை-புனே சாலையைபோல் சென்னை-பெங்களூரு இடையே விரைவுச் சாலை அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று நிதின் கட்காரி கூறினார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.