இந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக 15-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, கனடா சென்றார். அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு கனடா யுரேனியம் சப்ளைசெய்ய உடன்பாடு ஏற்பட்டது. கனடாவின் யுரேனியம் சப்ளை, இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனடாவின் 30 முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிபர்களை அவர் சந்தித்துபேசினார்.
அப்போது அவர், இந்தியாவில் 125 கோடி மக்கள், ஜனநாயகம், கிராக்கி இருக்கிற நிலையில், நல்லவாய்ப்புகள் உள்ளதால், தொழில்தொடங்க வருமாறு கனடா தொழில் அதிபர்களுக்கு அழைப்புவிடுத்தார். ரெயில்வே, காப்பீடு, வீட்டுவசதி துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் டொராண்டோ நிகழ்ச்சிகளை அவர் முடித்து கொண்டு, வான்கூவர் சென்றார். அங்கு உள்ள குருத்வாராவுக்கு (சீக்கியர்கள் வழிபாட்டுத்தலம்) கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசினார். அப்போது அவர், தங்கள் உழைப்பால் கனடாவில் உள்ள சீக்கியர்கள் இந்தியாவுக்கு மரியாதை தேடித் தந்துள்ளனர் . குருநானக் போதனைகள் பற்றியும், இந்திய விடுதலைப் போரில் சீக்கியர்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
அங்குள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண் கோவிலுக்கும் அவர் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார் பருடன் சென்றார். அங்கு அவர் வழிபாடு நடத்தினார். அங்கும் திரண்டிருந்த மக்களிடையே மோடி பேசினார். அப்போது அவர், இந்துத்துவம் என்பது மதம்அல்ல, அது வாழ்க்கை முறை என சுப்ரீம்கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ளதாக குறிப்பிட்டார். அங்குள்ள இந்தியர்கள், மக்களின் நன்மைக்காக யோகாவை பரப்ப வேண்டும்.
எனது இந்த பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது.
ஒரு இந்திய பிரதமர் 42 ஆண்டுகளுக்கு பிறகு, கனடாவுக்கு வந்ததால் அல்ல. இருநாடுகளுக்கும் இடையே இருந்த தொலைவு, கண நேரத்தில் விலகிவிட்டது.
இந்த பயணம் பெரும்வெற்றி கண்டுள்ளது. ஏனென்றால், பிரிந்திருந்த உறவு மீண்டும் இணைவதற்கு உதவி இருக்கிறது. இருநாடுகளுக்கு இடையேயான தடைச்சுவர், பாலமாக மாற்றப்படும். இந்தியாவும், கனடாவும் எண்ணங்களால் ஒன்றுபட்டுள்ளன. இருநாடுகளும் இணைந்து பயணம் செய்யும். பணியாற்றும்.
இந்தியாவின் வளர்ச்சியில் கனடா பங்கேற்றால், கனடாவும் பலன்அடையும். உலகின் ஆறில் ஒருபங்கு மக்களை கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சியில் பங்களிப்புசெய்த திருப்தியையும் கனடா அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.