நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர் எனக்கு உந்துசக்தியாக திகழ்ந்தார், நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தார். அவரால்தான் அரசியலில் இன்றைய உயரத்தை அடைந்துள்ளேன். அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ? இதை நான் அடிக்கடி நினைத்ததுண்டு.
இத்தகைய உந்துசக்தி மனிதரை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தார்.
அவரை 'தலித் தலைவர்' என்று சொல்வதை கேட்கும் போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர்.அவர் அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டார். அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்பராக மட்டும் அடையாளம் காண்பது அவருக்கு இழைக்கும் அவமரியாதையாகும்.
மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள், அம்பேத்கருக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை. அவர் ஏற்படுத்திய சட்டங்களினால் ஆட்சிக்குவந்த அரசுகளுக்கு, அவருக்கான சர்வதேச மையம் அமைப்பதற்கு திட்டங்களை தயாரிப்பதில் பிரச்னைகள் இருந்தன.
அம்பேத்கருக்கு 1992ஆம் ஆண்டில் சர்வதேசமையம் அமைக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் அதுதொடர்பான கோப்புகள், திரும்பப்பெறப்பட்டு, 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன.
அந்த பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்ட போது, கோப்புகள் காலதாமதம் அடைந்தது குறித்து கேள்விப்பட்டு அதிருப்தியடைந்தேன். அம்பேத்கருக்கு சர்வதேச மையம் அமைக்காமல் 20 ஆண்டுகள் வீணாகிவிட்ட நிலையில், அடுத்த 20 மாதங்களில் அதை அமைப்பது என நான் முடிவெடுத்தேன். அம்பேத்கரை போன்று இந்த நினைவுமையமும், தீண்டாமைக்கு ஆளாகலாம்.
முன்பு ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு, இடது சாரிக் கட்சிகள்தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 1942ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி புரியும் இடங்களில் சிறப்பான உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்தவர் அம்பேத்கர்தான். ஆங்கிலேய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்தவர் அவர்தான்.
அவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். அதனால்தான், தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது. தேர்தல் கமிஷன், நிதி கமிஷன் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை உருவாக்கினார். இன்றும் இவற்றின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்னவென்றால், எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.
வளர்ந்த நாடுகளில், வாக்குரிமை பெறுவதற்காக பெண்கள் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாக்குரிமை கிடைக்கச் செய்தவர் , பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக , ஹிந்து திருமணச் சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர்
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவாக தில்லியில் கட்டப்பட இருக்கும் சர்வதேச மையத்துக்கான அடிக்கல்லை திங்கள்கிழமை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியது:
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.