மீனவ பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மீனவ சங்க பிரதிநிதிகளிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். காரைக்கால், பாண்டிச்சேரி, ராமதாதபுரம், நாகை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் படுவதும், படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும் தொடர்வதாக தெரிவித்துள்ள மீனவர்கள், பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணுமாறு வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆழ் கடல் மீன்பிடிப்பை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் என்று மீனவர்களிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மேலும், எல்லையைத் தாண்டிச்சென்று, பாரம்பரிய முறைப்படி மீன் பிடிப்பதென்றால் அதற்கு எழுத்துப் பூர் அனுமதி பெற்றுத்தர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.