லஞ்ச விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால் இரட்டைநிலை

 போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ள தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை பதவி நீக்கம் செய்யக் கோரி, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு தில்லி பாஜக.,வினர் புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சதீஷ் உபாத்யாய் பேசியதாவது:

மக்களை முட்டாள்களாக்க தில்லி அரசு நினைக்கிறது. போலி சான்றிதழை கொண்ட தில்லி சட்ட அமைச்சருக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுகிறோம். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், தேவையேற்பட்டால் வழக்குப்பதிவும் செய்வோம்.

இந்த விவகாரத்தை மக்கள் முன் எழுப்பியுள்ளோம். ஜிதேந்தரசிங் தோமர் பதவி நீக்கம் செய்யப்படாதவரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். இதுபோன்ற அராஜகத்தை அனுமதிக்க இயலாது.

லஞ்ச விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால் இரட்டைநிலையை கடைப்பிடிக்கிறார். அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாகக் கூறுகிறார். அனைத்து அதிகாரிகள் மீதும் அவர் குறை கூறுகிறாரா?

தெற்கு தில்லி மாநகராட்சி பொறியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவரைத் தாக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னயில் சிங்குக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கின் நிலை என்ன? அரவிந்த் கேஜரிவால் முதலில் தனது கட்சியில் உள்ள நேர்மை யின்மையை சரிசெய்ய வேண்டும் என்று சதீஷ் உபாத்யாய் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...