மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் நம் மீனவச் சகோதரர்களிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு பேசி, அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தாய்மை உள்ளத்துடன் தனது உணர்வுகளை புரிந்து கொண்டது உண்மையிலேயே உள்ளத்தை தொடுவதாக இருந்தது.
• மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயர வேண்டும் அதற்காக மத்திய அரசு எவ்வளவு முதலீடு வேண்டுமானாலும் செய்யத் தயார்.
• ஆழ்கடல் மீன்பிடிப்பு என்பது ஓர் மாற்றுவழி அதற்கு நம் மீனவர்களுக்கு பயிற்சி கொடுப்பது, படகுகளுக்கு முதலீடு செய்வது, அதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி செய்வது அத்தனையும் செய்யத் தயார்.
• ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் நம் மீனவர்களின் பொருளாதாரம் இப்போதிருக்கும் நிலையை விட மூன்று மடங்கு உயரும் நிலை ஏற்படும் என்றாலும் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர்கள் அதில் ஈடுபட சாத்தியமில்லை என்று கூறியவுடன் என்னென்ன மாற்று வழிகளைச் சொல்கிறீர்களோ அவற்றைக் கூட செய்து தர தயாராக இருக்கிறது என்றார்.
• தடை செய்யப்பட்ட உபகரணங்கள் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி என்றால் எல்லையைத் தாண்டினாலும் பரவாயில்லை என்று எழுத்து மூலம் அனுமதி தரத் தயார் என்று கூறினார்கள்.
ஆக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அவர்களின் பிரச்சனைகளை அறிந்து உணர்ந்து திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் சொன்னவற்றை அறியாமல் அறிக்கை மட்டுமே விட்டிக் கொண்டிருப்பது நியாயமாக இருக்காது! இரண்டு நாட்கள் மீனவச் சகோதரர்களை அழைத்துச் சென்று கருத்தரங்கு நடத்தி, கருத்தைக் கேட்டு, ஒன்று விடாமல் பதிவு செய்து அதை அளித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை உணர்வை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லை தாண்டினால் அங்கே எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் தமிழ் மீனவர்கள் என்ற காரணத்தினாலும், சர்வதேச கடல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எல்லைத் தாண்டினால் தொல்லைகள் ஏற்பட்டு அதனால் மீனவச் சகோதரர்கள் வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தை கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதே போல் மதுரை உயர்நீதி மன்றத்தில் கடற்படை அதிகாரி எல்லைத் தாண்டினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை இருப்பதையும், இலங்கையில் பல வழக்குகள் கடத்தல் என்று போடபடுவதையுமே சுட்டிகாண்பித்திருக்கின்ற நிலையில் ஏதோ மீனவர்கள் என்றாலே கடத்தல் காரர்கள் என்று கூறிவிட்டதைப் போல் ஓர் கலகம் ஏற்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
மத்திய அரசின் நல்ல எண்ணத்தையும் – முயற்சியையும் மீன்பிடிக்கும் சகோதரர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அரசியலுக்காக அக்கறை இல்லாமல் அறிக்கை விட்டு குட்டையைக் குழப்புபவர்களுக்கு இது குழப்பமாகவே இருக்கும். நம் மீனவச் சகோதரர்கள் தெளிவுடனே இருக்கிறார்கள்.
திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் உண்மையான அக்கறையோடு எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளையும், மீனவர்களுக்கு உதவுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் திட்டங்களையும், மீனவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். பல ஆண்டுகளாக இப்படியே அவர்கள் இருக்கும் நிலைமாறி அவர்களின் வாழ்க்கையின் மாற்றத்தையும், ஏற்றத்தையும் இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.