விவசாயிகளின் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள்?

 தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத தமிழக அரசின், ஆவின் நிர்வாகத்தின் போக்கு, தமிழகம் அனைத்து நிர்வாகத்திலும் எப்படி தோல்வி அடைந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிறிது கூட இல்லாமல், முடங்கிக் கிடக்கிறது அரசு என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்யவில்லை என்றால் தமிழக விவசாயிகள் என்ன செய்வார்கள்? ஓர் அரசாங்கமே தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் விவசாயிகளின் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை வளங்கள் மக்களுக்குப் பயன்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது. உதாரணமாக காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கும், கடத்துவதற்கும் தொழில் நுட்பத்தை ஏற்படுத்தவில்லை.

சூரிய சக்தியை பயன்படுத்த மத்திய அரசு 500 கோடி மானியம் கொடுத்து திட்டங்கள் ஆரம்பிக்க சொன்னபின்பும் சூரிய ஒளியை பயன்படுத்தும் திட்டங்கள் எதையும் ஆரம்பிக்கவில்லை.

பாலை பதப்படுத்துவதற்கு, பாலில் இருந்து பல்வேறு மாற்று பண்டங்களைத் தயாரிப்பதற்கும் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தாததால் இன்று பால் ஊட்டச் சத்தில்லாமல் பல குழந்தைகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊட்ட வேண்டிய பாலை தெருவில் கொட்டுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது, வேதனை அளிக்கிறது. கொட்டிவிட்டுப் போகட்டும் நாங்கள் கொள்முதலையும் ஏற்றமாட்டோம், கொள்முதல் விலையையும் ஏற்றமாட்டோம் என்று ஆவின் இருப்பது நல்லதல்ல.

ஆவின் பாலில் இருந்து 18 வகையான பொருட்கள் தயார் செய்யலாம். அதில் முக்கியமானது பால்பவுடராகும். சர்வதேச சந்தையில் பால்பவுடர் விலை குறைந்தாலும் நாம் இதை தயாரித்தால் வியாபார நோக்கில்லாமல் ஏழை குழந்தைகளுக்காவது ரேஷன் மூலம் அளிக்கலாம் அல்லது இலவசமாகவாவது கரைத்து அளிக்கலாம்.

வெயில் நேரமாக இருப்பதால் பதப்படுத்த முடியாத நிலையில் கொள் முதல் செய்வதை குறைத்து விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, மோர் உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் அதிக லாபம் ஏற்படுத்தலாம். இல்லை என்றால் பாலை அனைத்து ஏழைப் பள்ளிக்குழந்தைகளுக்கு பவுடராகவோ, பாலாகவோ கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.

ஓர் அரசாங்கம் என்பது உற்பத்தி அதிகமானால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் நிர்வகிக்க வேண்டும். இன்னொன்று எனது மனதைத் தொட்ட சம்பவம்;.. சோதனை முறையில் வெளியிட்ட போதே கால் லிட்டர் பாலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. வரவேற்பு இருந்தது என்று சொல்வதைவிட அவர்களின் வரவிற்கு ஏற்ப அது மட்டுமே வாங்கக் கூடிய நிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இன்று வந்திருக்கும் செய்தி கால் லிட்டர் பாலிற்கு தட்டுபாடு இருக்கிறது என்பது. ஆக அதிக மக்களிடம் கால் லிட்டர் பாலுக்குத் தேவை இருக்கிறது.

அதிகமான பாலை கால் லிட்டர் பாலாக பாக்கட் போட்டு ஏழை மக்கள் இருக்கும் பகுதியில் விற்பதற்கு ஏற்பாடு செய்தால் வீணாகக் கொட்டப்படும் பால் ஊட்டப்படும் ஊட்டச்சத்துப் பாலாக மாறும். அதுமட்டுமல்லாமல் உடனே சத்துணவுக் கூடங்களில் பாலை கொடுக்க ஏற்பாடு செய்யலாம். இப்படி பல வழிகள் இருக்கும் போது வழியில் பால் கொட்டப்படுவது நல்லதல்ல.

இன்று வந்திருக்கும் தகவலின் படி கொள் முதல் செய்கிறோம் என்று உறுதிஅளித்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. ஆனால் பால் கொள் முதலை அதிகரித்து, பாலின் கொள் முதல் விலையையும் அதிகரித்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஆவன செய்ய வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்துக்கின்றோம்.

இல்லையென்றால் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...