நிலநடுக்கங்களை முன் கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன சாதனங்கள் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற மக்களவையில் ஹர்ஷ வர்தன் கூறியதாவது:-
அனைத்தும் முறையாக கண்காணிக்கப்படுகிறது . முன்கூட்டியே எச்சரிக்கைகளை அளித்து வருகிறோம். நில நடுக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் தொழில் நுட்பங்கள் இப்போதைக்கு இல்லை .
முடிந்தவரை தகவல்களை, எச்சரிக்கைகளை விரைவில் அளித்து வருகிறோம், சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமரைவிட முன்கூட்டியே தகவல் கிடைத்து விட்டது. இந்த விஷயத்தில் நாடு அபரிமிதமான முன்னேற்றம் கண்டுள்ளது.
புவிவிஞ்ஞானத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா பின் தங்கி விடவில்லை. அதேபோல் வானிலை அறிவிப்பு, பருவ நிலை திடீர் மாற்றங்களைக்கூட விரைவில் அறிவித்து எச்சரிக்கை செய்து வருகிறோம்.
விவசாயத்தை பாதிக்கும் திடீர்புயற்காற்று போன்றவற்றை தடுக்க முடியாது, ஆனால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வழியுண்டு. இதற்காக இத்துறை சார்ந்த தொழில் நுட்பத்தில் முன்னேறிய சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளோம்.என்று அவர் கூறியுள்ளார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.