ஓராண்டுக்கு முன்… அதாவது கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி… நாட்டின் 15-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட தினம்.
அன்று மோடி உறுதிமொழி ஏற்ற போது, அவரது ஆளுமையையும், உடை அலங்காரத்தையும், வெகுஜனம் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரும் கூர்மையாகக் கவனித்தனர். ஆனால், அப்போது அவர் தனது சட்டைப் பைக்குள் சில பிரசாத மலர்களை வைத்திருந்தது எத்தகைய கூர்மையான கண்களுக்கும் புலப்பட்டிருக்காது. அந்த பிரசாத மலர்களை மேற்கு வங்கத்தின் பேலூரிலிருந்து சுவாமி ஆத்மஸ்தானந்தர் மோடிக்கு அனுப்பியிருந்தார். அவற்றுடன் வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். சரி இதிலென்ன இருக்கிறது? பொதுவாகவே புதிதாக பிரதமரோ, முதல்வரோ பொறுப்பேற்கும்போது, சில மதத் தலைவர்களும், துறவிகளும் ஏதோ சில நோக்கங்களுக்காக இத்தகைய வாழ்த்து செய்திகளையும், பிரசாதங்களையும் அனுப்பவது வழக்கம்தானே என எண்ணலாம்.
ஆனால், அப்படியிருந்தால் நாட்டின் உயர்ந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், உணர்வுப்பூர்வமாக அந்தப் பிரசாதத்தை தனது சட்டைப் பைக்குள் மோடி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மதம் சார்ந்த நம்பிக்கை என்றும் அதை புறந்தள்ளிவிட முடியாது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தால், மோடி என்ற நபர், இன்று நாட்டின் பிரதமராக இருப்பதற்கு முதல் முதலில் அச்சாரமிட்டவர் அந்த 95 வயது துறவி சுவாமி ஆத்மஸ்தானந்தர் என்பது புரியும்.
துறவியாக வாழ விரும்பிய மோடியை, பொது வாழ்க்கையில் பயணிக்க வைத்ததில் சுவாமி ஆத்மஸ்தானந்தருக்கு முக்கியப் பங்கு உண்டு.
அரசியல் பயணத்தில், மோடி எவ்வாறு கீழ்நிலையிலிருந்து உயரிய பொறுப்புக்கு வந்தார் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், அரசியலுக்கு முன்னால் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பெரும்பாலோனோருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
1966-ஆம் ஆண்டு… குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுவாமி ஆத்மஸ்தானந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக நெறிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மோடி, ஆத்மஸ்தானந்தரின் தலைமையிலான ராமகிருஷ்ண மடத்தில் தங்கி சேவையாற்றச் சென்றார். அப்போது, தான் ஒரு துறவியாக விரும்புவதாக சுவாமியிடம் மோடி தெரிவித்தார். ஆனால், சுவாமி ஆத்மஸ்தானந்தர் மோடியை துறவியாக்க விரும்பவில்லை. மோடி மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார். அதை வலியுறுத்தவும் செய்தார்.
அதன்பிறகு, துறவியாகும் எண்ணத்தைக் கைவிட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அன்று முதலே அவரது பொது வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. சுவாமி ஆத்மஸ்தானந்தரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட மோடி, தனது வாழ்வின் முக்கிய தருணங்களில் அவரைச் சந்தித்து ஆசிகள் பெறத் தவறுவதில்லை.
நன்றி; தினமணி
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.