ஆம் ஆத்மிகட்சி எம்எல்ஏ.க்களின் போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் மற்றும் மனைவியை கொடுமைப் படுத்தியது தொடர்பான விவகாரங்கள் வெளியானதை அடுத்து, தனதுகட்சி உறுப்பினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழை அக்கட்சி வழங்கிய நிலையில் அது தவறாகிவிட்டது என்று டெல்லி பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம்பார்க்கிறோம். ஒன்று சட்ட சபை தேர்தலுக்கு முன்பு நடந்தது. மற்றொன்று இன்று நாம்பார்ப்பது. அக்கட்சியினர் தங்களது உறுப்பபினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழ்களை வெளியிட்டது. அது தற்பொழுது தவறாகிவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியினர், தங்களது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சுத்த மானவர்கள் மற்றும் எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் நன்னடத்தை அற்றவர்கள் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியின் முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்தர்சிங் தோமர் போலியான சான்றிதழ்களை தாக்கல்செய்தது மற்றும் மாளவியா நகர் எம்எல்ஏ. சோம் நாத் பார்தி மீது தன்னை கொடுமைப்படுத்தினார் என்று அவரது மனைவி குற்றச் சாட்டு கூறியது போன்ற விவகாரங்களை குறிப்பிட்டு உபாத்யாய் பேசியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம், கைது செய்யப் பட்டுள்ள ஊழல் அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஊழல் தொடர்பாக 35 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர்முழுவதும் அவர்களது போர்டுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் டெல்லி மாநகராட்சியை சேர்ந்த 2 பேர் சிறியளவிலான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார்? அவர்கள் டெல்லி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அதன்விவரங்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.