மாதந்தோறும் பொதுவிஷயங்கள் குறித்து வானொலி நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடிவரும் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 28ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கபடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, 'மன்கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுடன் வானொலியில் பேசிவருகிறார். அவர்கள் அனுப்பும் கேள்விகளுக்கு பதில்அளித்து வருகிறார். இதுவரை
நடந்த நிகழ்ச்சிகளில், நிலம் கையகப் படுத்தும் சட்டம், விவசாயிகள் பிரச்னை, மாணவர்கள் முன்னேற்றம், நேபாள நிலநடுக்கம் குறித்து பிரதமர் பேசியுள்ளார்.
குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மக்களுடன் உரையாற்றியுள்ளார். 9வது நிகழ்ச்சியாக வருகிற 28ம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பேசுகிறார். இது வரை பொதுவான விஷயங்கள் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, இந்த உரையாடலின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.