பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பயணம்

 2016-ல் நரேந்திரமோடி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என அந்நாட்டு பிரதமர் நவாஸ்ஷெரீப் விடுத்த அழைப்பை மோடி ஏற்று கொண்டதாக இந்திய வெளியுறவுசெயலர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இன்று (வெள்ளிக்கிழமை) நேருக்குநேர் சந்தித்து பேசினர். ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேபாள தலை நகர் காத்மாண்டுவில் சார்க் உச்சிமாநாடு நடந்தது. அதில், இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கலந்து கொண்டனர். ஆனால், இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை ஏதும் நடைபெற வில்லை. அதற்கு முன்னதாக மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஷெரீப் – மோடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரேயிடத்தில் கூடியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீபும் நேருக்குநேர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பிக்கு பின்னர் இரு நாட்டு சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடபட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலும் பாகிஸ்தான் வெளியுறவிவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீசும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

அதில், "இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க இருநாடுகளும் முடிவு செய்திருக்கின்றன.

மும்பை தாக்குதல்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த இந்தியா – பாகிஸ்தான் இடையே முடிவு எட்டபட்டுள்ளது.எல்லை பாதுகாப்புபடை இயக்குநர், பாகிஸ்தான் ரேஞ்சர் இயக்குநர் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவேண்டும் என இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடை பெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்புவிடுத்தார். பிரதமர் மோடியும் அந்த அழைப்பை ஏற்று கொண்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டறிக்கையை வெளியிட்ட இரு நாட்டு பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...