உத்தர பிரதேசத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மாநில தலைவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள உள்ள நிலையில், கான்பூர் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஷாவின் உருவம் கொண்ட போஸ்டர்கள் , பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கட்சியின் நகர அமைப்பு தலைவர் சுரேந்திர மைதானி கூறும் போது, பிரதமரின் உருவம்கொண்ட போஸ்டரை அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்புமையால் பூசி அழித்துள்ளனர். நகரின் மால்சாலை, வி.ஐ.பி. சாலை, ஜஜ்மாவ் மற்றும் பலபகுதிகளில் அமித் ஷாவின் படங்களும் சேதபடுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
வருகிற 2017ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தல் குறித்து முக்கிய விசயங்களை கலந்தாலோசிக்க மாநில தலைவர்கள் மற்றும் எம்எல்.ஏ.க்களை சந்திக்க ஷா முடிவு செய்து உள்ளார். அவரை வரவேற்கும் வகையில் நகரில் கட்சி தலைவர்களால் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 500 பேர் கலந்துகொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.