நிலம் கையகப் படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13ந் தேதிவரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாஜக கூட்டணி அரசு சில திருத்தங்களை கொண்டுவந்து புதிய மசோதாவை நிறைவேற்ற முயற்சிசெய்து வருகிறது.
ஆனால் இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறி, மசோதாவை நிறை வேற்றுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.
இந்த பிரச்சினையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பிய மத்திய அரசு, மசோதாவில் சிலதிருத்தங்களை செய்தது. அத்துடன் மசோதாவை நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளது.
ஆனால், அந்தகுழு கூடுதல் அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரிய நிலையில், இதுதொடர்பாக கருத்தொற்று ஏற்படுத்த மாநில முதலமைச்சர்கள் 'நிதிஆயோக்' அமைப்பின் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடுசெய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், 'நிலம் கையகப் படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்தொற்றுமை எட்டப் படுவது குறித்து ஆலோசிக்கபட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.