உலகளவில் மனித வளத்தின் தலைநகராக இந்தியா மாற வேண்டும். முறையான மற்றும் சரியான பயிற்சியின் மூலம் நம்முடைய திறன்களை பட்டைத் தீட்டினால், 4கு 5ந்து கோடி தொழிலாளர் சக்தியை இந்த உலகுக்கு நாம்மால் வழங்க முடியும். உலகமும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்ள சிறந்த எதிர்கால பார்வையும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டமிடலும் தேவை.
இந்தியர்கள் அபார திறமைகள் கொண்டவர்கள் என்பதை பல நூற்றாண்டுகளாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், அந்தத் திறமைகளை மறந்துவிட்டோம். அவற்றை மீட்டெடுக்க வேண்டும். இதற்காக, இந்தியாவில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்கள், முழு வீச்சுடன் செயல்பட வேண்டும்.
நம்மிடம் அதிக திறன் உள்ளது. இது கடந்த ஆண்டுகளில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் நமது திறமையை நாம் மறந்துவிட்டோம். எனவே அவற்றை நாம் மீண்டும் திரும்பபெற வேண்டும்.
இன்று பல்வேறு வளர்ந்த நாடுகளில் நிறைய வளங்கள் இருந்தாலும், மனித வளங்கள் இல்லை. ஆனால் நம்முடைய இளைஞர்களின் திறனை வளர்த்தெடுத்தால், அதிக மனிதவளம் பெற்ற ஒரே நாடாக, வளர்ந்த நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரே நாடாக, இந்தியாவால் வெகு விரைவில் மாறமுடியும்.
உலகின் 'தயாரிப்பு நிறுவனமாக' சீனா விளங்கினால், உலகளவில் மனித வளத்தின் தலைநகராக இந்தியா விளங்க முடியும் . அதுவே நமது இலக்காகவும் இருக்க வேண்டும். இதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமைக்கு எக்காரணமும் கூற முடியாது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இதற்கு முக்கிய தீர்வாகும் . அரசின் மிக முக்கிய நோக்கமும் அதுவே ஆகும். இதற்காக சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
தில்லியில் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி, புதன்கிழமை தொடக்கி வைத்து பேசியது.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.