அப்துல் கலாம் ஷில்லாங் சென்ற போது, அவருடன் சென்ற ஸ்ரீஜன் பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதியுள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ஷில்லாங் மேலாண்மை கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பிறகு நாங்கள் சொற் பொழிவு அறைக்குள் நுழைந்தோம். மேடை ஏறியதும் அவர் பேசுவதற்கு தயார்செய்தேன். அதைப்பார்த்து சிரித்தார். ""எப்படி இருக்கீங்க'' என்று என்னைப்பார்த்து கேட்டார். நானும் "நன்றாக இருக்கிறேன்'' என பதில் அளித்தேன்.
பேசதுவங்கி, ஒரு வாக்கியத்தை முடித்ததுமே அவரிடம் ஒரு அமைதி ஏற்பட்டது. நான் அவரைப்பார்த்தேன். திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.
உடனே அவரை நாங்கள் தாங்கிப்பிடித்தோம். அவரை நோக்கி டாக்டர் விரைந்தார். கலாமின் கண்கள் எங்களைநோக்கி நிலைகுத்தி நின்றன. அவரது தலையை ஒருகையில் நான் தாங்கிக்கொண்டு, அவரது கைகளை பற்றிக் கொண்டேன். அவரை பிழைக்கவைக்க என்னென்வோ செய்தோம். அவர் எந்த வலியையும் காட்டவில்லை.
அடுத்த 5 நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவ மனையில் இருந்தோம். அதற்கடுத்த ஐந்தாவது நிமிடம், நமது நாட்டின் ஏவுகணை மனிதர், நம்மைவிட்டு போய்விட்டார் என்றார்கள்.
கடைசியாக அவரது பாதங்களைதொட்டு வணங்கினேன். பெரிய அறிஞர், எனது பழைய நண்பர். உன் நினைவுகள் என்றைக்கும் எனக்குள் இருக்கும். அடுத்தபிறவியில் சந்திப்போம் என நினைத்தேன்.
அவரை பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனதில் ஓடத்துவங்கின. அவருடன் பலமுறை உணவு அருந்தியது. பேசியது, பழகியது எல்லாமே நினைவில்வந்து மோதின. மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற பணி காத்திருக்கிறது. கலாம் வாழ்க! -உங்களுக்கு கடன்பட்ட மாணவர். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.