சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 73வது ஆண்டு தினத்தை யொட்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:–
1947–ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஓய்வின்றி பாடுபட்ட சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு என் வீரவணக்கம். இன்று (நேற்று) வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 73–வது ஆண்டுதினம் ஆகும். இந்த இயக்கம், இந்தியாவின் விடுதலைக்கு வழிநடத்தியது.
மாத ஓய்வூதியம் எவ்வளவு?
விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கான அகவிலைப்படியை 218 சதவீதமாக ஆக்கி, அவர்களின் ஓய்வூதியம் 2014–15 ஆண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
193 சதவீத அகவிலைப் படியை 218 சதவீதமாக ஆக்கிய பிறகு, 2014 ஆகஸ்டு 1–ந்தேதி நிலவரப்படி முன்னாள் அந்தமான் அரசியல் சிறைக்கைதிகளுக்கான ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.23 ஆயிரத்து 309 ஆகும்.
விடுதலைப்போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது துணை வியாருக்கான ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்து 129 ஆகும். திருமணம் ஆகாத, வேலையில்லாத மகள்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,770.
இந்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி நிலவரப்படி, மத்திய சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 434. அவர்களின் விதவைகள் அல்லது தகுதி வாய்ந்த சார்ந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 466. ஆக மொத்தம் சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 900.
தமிழ்நாட்டில் 2,005 பேர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.