சுஷ்மாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

 ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடிகொடுத்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப், அங்கு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். அவர்பேசுகையில், பதற்றத்துக்கான காரணத்தை இரு நாடுகளும் கண்டறிந்து அகற்றுவதுடன், மேலும் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, 4 அம்ச அமைதி திட்டம் ஒன்றை நான் முன் வைக்கிறேன் என்று கூறி, 4 அம்சங்களையும் வெளியிட்டார். இதனையடுத்து ஐநா.சபையில் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், பாகிஸ்தான் குறிப்பிட்ட 4 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்து, தீவிரவாதத்தை மட்டும்விடுங்கள் என்று சரியான பதிலை கொடுத்தார்.

பாகிஸ்தானின் பேச்சுக்கு சுஷ்மா சுவராஜ் நேர்த்தியான பதில்களை, உலகநாட்டு பிரதிநிதிகள் அமர்ந்துஇருந்த அவையில் வெளியிட்டார்.

ஐ.நா.சபையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மாவிற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

"சுஷ்மா சுவராஜ் ஜி சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் என்பது முக்கியமானது என்ற உங்களுடய பேச்சை ஏற்றுக்கொள்கின்றேன்."

"மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச்சில் அனைத்து தரப்பிலும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசியத்தையும், உலகத்தை வாழ்வதற்கு அமைதியானதாக மாற்றவேண்டும் என்பதையும் சரியாக வலியுறுத்தியுள்ளார்."

"சுஷ்மா சுவராஜ், ஐ.நா.விற்கு இந்தியாவின் பங்களிப்பை மிகவும் நேர்த்தியாக முன்னிலை படுத்திக் காட்டி உள்ளார் மற்றும் 21-ம் நூற்றாண்டில் ஐ.நா. எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான இந்தியாவின் பார்வையும் பகிர்ந்து கொண்டுள்ளார்."

சுஷ்மா சுவராஜியிடம் பேசினேன், அவருடைய சிறப்பான பேச்சுக்கு பாராட்டுக்களை தெரிவித்தேன். உலகின் முக்கியபிரச்சினைகள் தொடர்பான சரியான உரையாடலாக இருந்தது, என்று பிரதமர் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...