பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை கீதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘‘மீண்டும் வீடு திரும்பி யிருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது உண்மை யாகவே அற்புதமான தருணம். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள அனைவரும் உங்கள்மீது அக்கறை செலுத்துவோம்’’ என்றார்.
பாகிஸ்தானில் கீதாவை 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த எத்தி பவுண்டேசன் நிறுவனர் பில் குயிஸ் எத்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்தார். கீதாவை அன்புடனும், பரிவுடனும் கவனித்து கொண்ட எத்தி குடும்பத்தினருக்கு நன்றிசொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் செய்தது விலை மதிப்பற்றது என்றாலும், உங்கள் அறக் கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
இந்தியாவை சேர்ந்த காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமி கீதா கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்று விட்டார். பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் ரயில்ஒன்றில் ஆதரவின்றி அழுதுகொண்டிருந்த அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் கராச்சியில் உள்ள 'எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர். தற்போது 23-வயதாகும் கீதா இது வரை அந்த அறக்கட்டளையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த பலஆண்டுகளாக அவரது பெற்றோரை கண்டுபிடிக்க எதி அறக்கட்டளை பல முயற்சிகளை செய்தும் பலனில்லை.
இதனிடையே கீதா லாகூரில் இருக்கும் தகவலைஅறிந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரை மீட்க உரிய நடவடிக் கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கீதாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லாகூரில் உள்ள எதி தொண்டுநிறுவனம் முன்வந்தது. இதன்படி நேற்று காலை 8.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து கீதா இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் எதிதொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் வந்தனர்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.