கடவுள் கல் என்றால் அக்காள், தங்கை, மனைவி உறவில் வித்தியாசம் எதற்கு?

 திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் திரும்பி வரும் போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு.

இந்துக்களையும் அவர்கள் வழிபாடுகளையும்
இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.

இயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின் மீதும் நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த அந்த பள்ளி மாணவனுக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும் அமைதியாக அங்கு சென்று அந்த மத மாற்ற
பாதிரியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தான் அந்த சிறுவன்.

தொடர்ந்து பாதிரியார் மைக்கேல் தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்து கொண்டிருந்தார்…“பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது.
இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,
கூடவே கூடாது…!.

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக்
கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன்,
அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…!

மாணவன்:
“பாதிரியார் அவர்களே!
ஒரு சந்தேகம்…
அதை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும் !

பாதிரியார்:
“என்ன சந்தேகம்?
அதை விளக்கத்தானே ஆண்டவன்
என்னை..உங்களிடம்
அனுப்பி உள்ளான்.
தயங்காமல் கேள் சிறுவனே !.

மாணவன்:
“அப்படியனால் நான்
கேட்பதை வைத்து என் மேல் கோபப்படக் கூடாது நீங்கள்…!”

பாதிரியார்:
“எனக்கு ஏன் வருகிறது கோவம்?”
எதுவானாலும் கேள் . . .!.

மாணவன்:
“நான் நிற்பதும் ஒரு கல். கோவிலின் உள்ளே சிலையாக இருப்பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…”

பாதிரியார்:
“இரண்டும் கல் தான்.
இதிலென்ன . . . !”

மாணவன்:
“சில பாதிரிமார்களுக்கு தாயார்,
அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.

பாதிரியார்:
“ஆமாம்…!”

மாணவன்:
“சில பாதிரிமார்களுக்கு மனைவியும் ,மக்களும் இருக்கிறார்கள்.”

பாதிரியார்:
“உண்மை தான்”

மாணவன்:
“இவர்கள் அனைவரும் பெண்கள்
தானே…?”

பாதிரியார்:
“சந்தேகம் என்ன
வந்தது!.
இதிலே அனைவரும் பெண்கள்தான் ?”

மாணவன்:
“அவர்கள் அனைவரும்
ஒரே பெண்கள்தான் என்று
எண்ணப்படுமேயானால்!!. . . தங்கள் மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,
தங்கையர்களை பாவிக்க முடியுமா?.
அப்படி பாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .?.
நீங்கள் இதில்…
இதற்கு தயவு கூர்ந்து விளக்கம்
சொல்லுங்கள் ?”.

எதிர்பாராது எழுந்த அதிர்ச்சிகரமான கேள்வியை அதுவும் ஒரு பள்ளி சிறுவனிடம் இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம் போலாகி விட்டார் பாதிரியார். திகைத்து போய் ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்… . அது வரையிலும் வாயடைத்துப் போய் நின்ற பெருங் கூட்டத்தினர் எழுப்பிய ஆரவாரங்கள், கையோலிகள் என விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவு பெற்றார் பாதிரியார் ………

பாதிரியார்:
“தம்பி இங்கே வாருங்கள்… பிற
மதங்களைப் பழிக்கக்
கூடாது என்பது ஆண்டவன் இட்ட
கட்டளைகளில் ஒன்றாகும்.
அதை மறந்தேன்.
தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.
உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவனாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான்.
நன்றி”.

 

 

என்று சொல்லி விட்டு, அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் .அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும் உத்தமர் பசும் பொன் தந்த சித்தர் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்

 நன்றி விக்டோரியா கௌரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...