வளர்ச்சியுடன் அரசியல் தொடர்பு படுத்தப்படுவதே வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடை

 வளர்ச்சியுடன் அரசியல் தொடர்பு படுத்தப்படுவதே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக உள்ளது.

 இன்றைய கால கட்டத்தில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள்தான் மிகவும் முக்கிய மானவையாக விளங்குகின்றன. மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மக்களை சென்றடையும் போது வளர்ச்சிவேகம் அதிகரிக்கிறது. மேற்கண்ட வசதிகள் வரும் போது, மக்களின் வாழ்க்கை தரத்தில் பெரியமாற்றம் வருகிறது.

 ஆனால், நம் நாட்டில் அரசுகள் எப்போதும் ஒருவித குழப்பத்திலேயே இருக்கின்றன. "வாக்காளர்கள் பயன டைந்தால், அதனால் தேர்தலில் நமக்குப் பயன்கிடைக்குமா?' என்று அவை யோசிக்கின்றன.
 ஆனால், சாலைகள் அமைக்கப்பட்டால், "அதில்பெரிதாக என்ன இருக்கிறது? அது அரசின்வேலை. அதனால் நமக்கு என்ன பயன்?' என்று வாக்காளர் யோசிக்கிறார்.

 இத்தகைய குழப்ப மானது நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. இவ்வாறு வளர்ச்சிப் பணிகளுடன் அரசியல் தொடர்பு படுத்திப் பார்க்கப்படுவது தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக உள்ளது.

 வளர்ச்சியின் பலன்கள் தலித்துகளையும், சமூகத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் இருப்பவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப் படுத்துவது மாநில அரசுகளின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். பாரபட்சமற்ற வளர்ச்சியை ஏற்படுத்தவும், மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றவும், உள் கட்டமைப்பு வசதிகள் மீது கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகும்.

 மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையின் கீழ் நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் இவ்வளவுதுரிதமாக நடைபெறும் என்று சுதந்திரம்பெற்ற இந்த 60 ஆண்டுகளில் யாரும் கற்பனைசெய்து பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நெடுஞ்சாலை திட்டங்களில் பாரத்மாலா, சாகர்மாலா, சேதுபாரதம் ஆகியவை அடங்கும்.

 துரதிருஷ்ட வசமாக, நவீன இந்தியாவில் உள்ள 18,000 கிராமங்களில் இன்னமும் மின்சார இணைப்புகள் இல்லை. இந்த 21ம் நூற்றாண்டிலும் அங்கு மின் கம்பங்களோ, மின் இணைப்போ இல்லை. ஆனால், அனைத்து கிராமங்களுக்கும் எதிர் வரும் 2022ம் ஆண்டுக்குள் மின்சாரவசதியை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது .

ஹரியாணா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சோனிபட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று, இத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...