தேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்படகூடாது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் திருப்தி படுத்தப் படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைபாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றிவந்த அப்துல் ரஷீத்தும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைபதுல்லா கான் என்பவரும் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் தேசதுரோக பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்கு கொல்கத்தா நகரில் ஐஎஸ்ஐ. உளவு அமைப்புக்காக வேவுபார்த்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் கைதான கைபதுல்லா கான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவுபார்த்ததாக கைதான கைபதுல்லா கானுக்கும் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகஊழியர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரிடம் கேள்வி எழுப்பட்டது. ”ஓட்டு வங்கி அரசியலை பொருட்டு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை சாந்தப் படுத்தப்படுகிற நிலையானது காணப்படுகிறது. இது நல்லதுகிடையாது. தேசத்தின் பாதுகாப்பு மீது கேள்வி எழும் நிலையில், அரசியலுக்கு எந்த ஒரு நோக்கமும் கிடையாது,”
உலகளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் கூட்டாக போரிட்டுவருகிறோம்; இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுகிறது. நம்முடைய ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடங்கிய மூன்று மறைமுக போரிலும் தோற்கடிக்கப் பட்டது. என்று கூறினார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.