பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற உள்நாட்டிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்

 பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறவேண்டுமானால் ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் கர்நாடக மாநிலம் தும கூறு மாவட்டம் பிதர் ஹல்ல கவால் பகுதியில் ரூ.5 ஆயிரம்கோடி மதிப்பில் உருவாக உள்ள ஹெலிகாப்டர் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:

நமது ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உலகிலேயே மிகச்சிறந்ததாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ராணுவத்துக்காக ஏராள மான ஆயுதங்கள் வெளிநாடுகளி லிருந்து நாம் இறக்குமதி செய்கி றோம். அவை விலை உயர்ந்த வையாக உள்ளதால் இதற்காக கோடிக்கணக்கான பணம் செல வாகிறது. அதேநேரம் அவை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தாக இல்லை. எனவே, ஆயுத இறக்குமதி தொடர்பாக வெளி நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடும் போது, இந்தியாவில் உற்பத்திப் பிரிவை தொடங்கவேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற வேண்டுமானால், நமது ராணுவத்துக்கு தேவையான ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்வதில் கவனம் செலுத்தவேண்டும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...