கும்மனம் ராஜசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் கேரள பிஜேபி துள்ளி எழுந்து வேலை செய்கிறது. இந்துக் களுக்கு அடுத்து கேரளாவில் முஸ்லிம்கள் 27%உள்ளதால் இயல்பாகவே இரு சமூகமும் ஒத்து போவதில்லை அதனால் அதற்கடுத்து உள்ள 18% கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெறுவதற்கு பிஜேபி தலைவர் முயன்று வருகிறார்.அதனால் அவர் மாநிலத்தில் உள்ள பிஷப்புக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
கேரளாவில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும் காங் கிரஸ் கூட்டணியில் உள்ள முஸ்லிம்லீக்கின் தயவால் காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்து வருகிறது.இதற்கு எதிராக இடது சாரிகள் கூட்டணிக்கு கிறிஸ்துவர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு சிறு பான்மையினரையும் எதிர்த்து அரசியல் செய்வது விவேகமா னஅரசியலாகாது என்பதை நன்கு உணர்ந்துள்ள பிஜேபி தலை வர்நன்றாகவே கிறிஸ்துவர்களின் வாக்குகளை கைபற்ற காய் நகர்த்தி வருகிறார்.
கேரள மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அவ்வளவாக இணக்கம் இல்லாததால் பிஜேபியின் இந்த மூவ் ஓரளவிற்கு பயனளிக்கும்.ஏற்கனவே வெள்ளாபள்ளி நடேசனின் ஈழவ சமுதாய அமைப்பான எஸ்என்டிபியின் அரசியல் பிரிவாக புதிதாக துவங்கப்பட்டுள்ள பிடிஜேஎஸ்(பாரத் தர்ம ஜன சேனா) கட்சியுடன் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் ஊழல் குற்ற சாட்டுகளால் தடுமாறி நிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தன்னுடைய அடிப்படை வாக்குகளான இந்துக்களில் 25% உள்ள ஈழவர்களின் வாக்குகள் பிஜேபி கூட்டணிக்கு செல்லும் பொழுது இயல்பாகவே இடது சாரி கூட்டணியும் பலம் இழந்து விடும்.
இதனால் நிகழும் மும்முனை போட்டியில் நிச்சயம் பிஜேபி கூட்டணி அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாற வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.