சாதிகளின் பெயரால் சண்டையிட்டே முடங்கி போன வரலாறு எப்பொழுது மாறும்?

காங்கிரஸ் கட்சி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிந்தரன் வாலேக்களை உருவாக்கிவிடுவது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகள்.குஜராத்தில் பிஜேபி ஆட்சிக்கு எதிராக ஹர்திக்படேல் என்ற ரவுடியை தேர்ந்தெடுத்து படேல் மக்களு க்கு இட ஒடுக்கீடு கேட்டு போராட வைத்த காங்கிரஸ் கட்சி அடுத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்த முத்ரகடா பத்பனாபம் என்பவர் தலைமையில் காபுக்களைதூண்டி விட்டுள்ளது.

ஆந்திர மக்கள் தொகையில் 27% உள்ள இந்த காபுக்கள் வேறு யாருமல்ல..கிருஷ்ண தேவராயர், திருமலை நாயக்கர்,வழியில் வந்து மதுரையை  ஆண்ட ராணி மங்கம்மாவின் வாரிசுகளே இவர்கள்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும் இந்த ஜாதியை சேர்ந்த வரே.காலம் காலமாய் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக இருந்த இவர்கள் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் பின்னால் சென்றதால் காங்கிரஸ் சிரஞ்சீவியை விலைக்கு வாங்கி பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காலி செய்தது.
.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில உருவா க்கத்தில் அரசியலில் செய்த குழப்ப அரசியலால் குழம்பிய காபு க்கள் ஜகன் மோகன் ரெட்டி பக்கமும் சந்திரபாபு நாயுடு பக்கமும் திரும்பி விட்டனர்.இதை மீட்டு எடுக்க காங்கிரஸ் தன்னுடைய வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டது.

எந்த ஆட்சி ஒழுங்காக நடந்தாலும் அதை நடக்க விடாமல் அங்கே கலவரத்தை தூண்டி அரசியல் குழப்பத்தை உருவா க்கும் காங்கி ரஸ் கட்சி தற்பொழுது முத்ரகடா பத்பனாபம் என்ற முன்னாள் தெலுங்குதேச அமைச்சரை காபுக்களுக்கு பிற்படுத்த பட்டவர்கள் பட்டியலில் இடம் வேண்டும் என்று கூறிபோராட்ட த்தில் இறக்கிவிட்டு ள்ளது.இதற்கு ஆதரவாக முன்னாள் காங்கிரஸ் மத்திய மந்திரி தாசரி நாராயணராவும் உள்ளார்.

இதனால் குஜராத் மாதிரியே ஆந்திராவும் போர்க்களமாகி கொண்டு வருகின்றது.படேல் சாதியை போன்றே முன்னேறிய வகுப்பின ராகிய இவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்இனி ஓவ்வொரு மாநிலத்திலேயும் இந்த மாதிரி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்து விடும்.

ஒரு பக்கம்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு,மறுபக்கம் முன்னே றிய இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் அடுத்து பிற்படுத்தப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் பட்டி யலில் சேர்க்க வேண்டும்.அடுத்து மிகவும் பிற்படுத்த ப்பட்ட வர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும், அடுத்து மதம் மாறிய தலித்துகளுக்கும் சலுகைகள் வேண்டும் என்று காங்கிரஸ் பிரித்தாளும் அரசியலை செய்து கொண்டே இருக்கிறது.

அடுத்து தாழ்த்தப்பட்டவர்களை மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று போராட்டங்கள் வரலாம். இப்படி ஒவ்வொரு சாதியினரும் வெறும் சலுகைகளுக்காக தங்களின் அடையாளத்தையே மாற்ற நினைப்பது வருத்தமானது..

இதையெல்லாம் மாற்றி சாதிகளை களைந்து இந்துக்கள் என்று பிஜேபி சொல்ல வரும்போது நாட்டை மதரீதியாக பிரிக்க சதி நடக்கிறது இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய போகிறது என்று ஊளையிடுகிறது.சாதிகளின் பெயரினால் சண்டையிட்டே இந்தியா முடங்கி போனவரலாறு எப்பொழுது மாறும்? என் தேசம் எப்பொழுது வல்லராசாக மாறும் என்று கனவுகளுடன் காத்திருக்கிறேன்.

நன்றி ; விஜெயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...