ஆன்மிககுரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் "வாழும் கலை' அமைப்பின் உலக கலாசார திருவிழா நிகழ்ச்சியை அரசியலாக்க கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.
இது குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்ச்சி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து 36 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார விழா வாகும். இந்த விழாவால், இந்தியாவுக்கு பெருமை சேரும்.
இந்த நிகழ்ச்சிக்காக, யமுனை நதியில் தாற்காலிக மிதவை பாலங்களை அமைக்க ராணுவத்தினர் பயன்படுத்தப் பட்டது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. மத்தியில் முந்தைய ஆட்சிக்காலங்களிலும் கும்பமேளா, சங்கராந்தி உள்ளிட்ட மதம்சார்ந்த முக்கிய திரு விழாக்களுக்கான ஏற்பாடுகளின்போது, ராணுவத்தினர் உதவிகளை செய்துள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
எனவே மிதவைப்பாலங்கள் அமைக்க ராணுவத்தினர் உதவியது குறித்து குற்றம்சாட்டு தேவையற்றதாகும். ஒருநிகழ்ச்சியில் 36,000 கலைஞர்கள் பங்கு கொள்வது என்பதே சாதனையாகும்.
இது, வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் நிகழ்ச்சியாகும். இதில் நாம் கலந்துகொள்வோம். இதனால் இந்தியாவுக்குப் பெருமைசேரும். எனவே இதை அரசியலாக்க கூடாது என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.