பீகார் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஒவ்வொரு அரசுதுறை சார்பில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யும்போது எம்எல்ஏக்களுக்கு கவுரவ பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநில கல்வித்துறை சார்பில் 243 எம்எல்ஏக்களுக்கும் மைக்ரோவேவ் ஓவன் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பரிசுபொருட்களை அரசிடம் திரும்ப தர இருப்பதாக பாஜக எம்எல்ஏக்கள் கூறியிருக்கின்றனர். மாநில பாஜக மூத்த தலைவரான சுஷில்குமார் மோடி நேற்று அளித்தபேட்டியில், ‘லட்சக் கணக்கான பள்ளி ஆசிரியர்கள் கடந்த 4 மாதமாக சம்பளம் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் விலையுயர்ந்த பரிசுபொருட்கள் எம்எல்ஏ.,க்களுக்கு தேவையா? அதனால், நானும், பாஜ எம்எல்ஏக்கள் பிரேம்குமார், மங்கள் பாண்டே ஆகியோரும் பரிசு பொருட்களை திருப்பி தர முடிவுசெய்துள்ளோம்’ என்றார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.