மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்ததை யொட்டி ‘வளர்ச்சித் திரு விழா’ என்ற பெயரில் நாடுமுழுவதும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ் பூரில் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
இந்திய மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்முறை நாட்டின்வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. ஏழைகள் மற்றும் பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி மக்களை கொல்லமாட்டார்கள். வேறு சித்தாந்தத்தை மாவோயிஸ்டுகள் பின்பற்றலாம். ஆனால், அது அப்பாவிமக்களை கொல்வதாக இருக்கக்கூடாது.
எனவே, மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். வன்முறையை கைவிட்டால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச மத்திய அரசு தயாராக உள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.