சுயகோல்’ அடிக்காதிங்க

மோடி அரசில் ரூ.46 ஆயிரம்கோடி ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியதற்கு நிதி மந்திரி அருண்ஜெட்லி ‘சுயகோல்’ அடித்தற்கு ஒப்பானதாக உள்ளது பதிலடி தந்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள், ‘‘2006 முதல் 2010–ம் ஆண்டுவரை ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட 6 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை குறைத்துகாண்பித்து இருப்பதை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கண்டு பிடித்தார். இதனால் ரூ.46 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுஇருக்கிறது. இந்த நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் தவிர்க்க மத்தியஅரசு உதவுகிறது. ஊழலை பற்றிபேசும் மோடி அரசு ஊழலை மறைக்கப் பார்க்கிறது’’ என்று குற்றம்சாட்டினர்.

இதை நிதிமந்திரி அருண்ஜெட்லி தனது முகநூலில் கிண்டல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.46 ஆயிரம்கோடி ஊழல் நடந்தது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருப்பது அக்கட்சி விளையாட்டில் ‘சுயகோல்’ அடித்தற்கு ஒப்பானதாக உள்ளது. காங்கிரஸ் இதில் மனதைசெலுத்தாமல் இந்த குற்றச்சாட்டை கூறி இருக்கிறது.

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தொலைத்தொடர்பு துறைக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்தது. அதற்கு ஆதாரமான ஆவணங்கள் கடந்தமாதம் கிடைக்கப்பெற்றன. இதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற நடைமு றைப்படி தலைமை கணக்குதணிக்கை அதிகாரியின் அறிக்கை தற்போது பொதுக் கணக்கு குழுவிடம் நிலுவையில் உள்ளது. இதில் தற்போது எழும் கேள்வி என்ன?… இந்த ஊழல் தேசியஜனநாயக கூட்டணி ஆட்சியின் போதா நடந்தது? இந்த முறைகேடு நடந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதானே அதிகாரத்திலிருந்தது. எனவே, காங்கிரஸ் அரசுதான் இதை (ஊழல்) அனுமதித்து இருக்கிறது. என்றாலும் அவர்கள்செய்த தவறுக்கு நிச்சயமாக தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...