ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் அருகே மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: பல வெளிநாடுகளில் மக்கள்தொகை சுருங்கி வருகிறது. இந்தநிலை தொடர்ந்தால் பயிற்சி பெற்ற, திறமை வாய்ந்த இந்திய இளைஞர்களுக்கு அது வேலைவாய்ப்பை அளிக்கும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளால் பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை. பலர் வேலையி ல்லாமல் உள்ளனர். தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. வேளாண் துறையில் உள்ள 55 சதவீத மக்களின் பங்களிப்பு தேசிய ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 16 சதவீதமாக உள்ளது.
இவர்களின் நலனுக்காக திட்டங்களை தீட்டவேண்டும். பொருளாதாரத்தில், உற்பத்தித்துறையின் பங்கு 25 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பமாகும். முதல் தொழில்புரட்சி ஏற்பட்ட போது, நாம் அரியவாய்ப்பை தவறவிட்டு விட்டோம். இதே போன்று, இரண்டு, 3வது தொழில் புரட்சியியிலும் வாய்ப்பை இழந்தோம் . குறைந்த விலை பொருள்கள் தயாரிப்பில் நாம் கவனம் செலுத்த வில்லை. இந்தியாவைவிட, சீனா மற்றும் இதர ஆசியநாடுகள் இதனால் பயன்அடைந்தன. இப்போது நான்காவது தொழில்புரட்சி இந்தியாவில் தொடங்கவேண்டும்.. இதில் நாம் வெற்றிபெறுவோம் என்றார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.