ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்லிடப் பேசி சேவை தொடர்பான விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டி வருமாறு: டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தபோது, டிஜிட்டல் பாகுபாடு நிலவுவதை முடிவுக்கு கொண்டுவரவே அதைத் தொடங்கி வைத்துள்ளார் என்று நான் நினைத்தேன்.
நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை யார் வழங்கினாலும் சரி, அவர்கள் பிரதமரின் கனவை பூர்த்திசெய்கிறார்கள் என்றே அர்த்தமாகும். அந்தவகையில் பார்த்தால், ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் படம் பயன்படுத்தப் பட்டிருப்பதில் எந்தத்தவறும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுக்கு பிற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று எனக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 முதல் 20 தலைவர்கள் புகார்க்கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், அந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் படம் பயன்படுத்தப்பட்டதை காங்கிரஸ் குறை கூறியது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பது, ஜியோவிவகாரத்தில் அக்கட்சி இரட்டை வேடம் போடுவதை வெளிப்படுத்துகிறது.
வர்த்தக ரீதியிலான சேவைத்தொடர்பான விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்த பிரதமர் அலுவலகத்திடம் முன் அனுமதி பெறவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து நடைபெறும் விவாதம் குறித்து கேட்கிறீர்கள். இதற்கு என்னால் பதிலளிக்கமுடியாது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார் சின்ஹா.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.