இந்த ஆண்டு விஜயதசமி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி, 38 பயங்கரவாதிகளையும், 2 சிப்பாய்களையும் கொன்று குவித்து, 7 முகாம்களை நிர்மூலமாக்கி யதையும் அவர் இப்படி குறிப்பிட்டதை உணர்ந்து கூட்டத்தினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தில்லி விஞ்ஞான் பவனில் ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் வாழ்க்கைவரலாறு, கருத்துகள் அடங்கிய 15 புத்தகங்களின் தொகுப்பை மோடி ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
சில தனி நபர்கள் மட்டுமே நடத்தும் அரசியல் கட்சிகள் போல அல்லாமல், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலான அரசியல்கட்சியை நடத்தியதே தீனதயாள் உபாத்யாய நாட்டுக்குசெய்த மிகப்பெரிய சேவை. இதுதான் ஜனசங்கம் மற்றும் பாஜகவின் முக்கிய அடையாளம். எதிர்க் கட்சிகளில் ஒன்று என்ற நிலையில் இருந்து ஆட்சி அமைப்பதற்கான அடுத்த மாற்றுக்கட்சி என்ற நிலையை மிகக் குறுகிய காலத்தில் எட்டியுள்ளோம். சிறிய விதையில் இருந்து பெரியவிருட்சமாக கட்சி உருவெடுப்பதற்கு தீனதயாள் உபாத்யாய அமைத்த அடித்தளம்தான் முக்கியக் காரணம்.
ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், தலித்மக்களின் மேம்பாடு குறித்தே அவரது சிந்தனை இருந்தது. இப்போது அவரது நூறாவது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது ஏழை, எளியவர்களின் நலன்களில் மத்திய அரசு அக்கறை செலுத்திவருகிறது.
ஒரு நாட்டின் ராணுவம் மிகவும் திறமைவாய்ந்ததாகவும், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் வல்லமை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் தேசம் வலிமையாக இருக்கும் என்பதுதான் உபாத்யாயவின் கருத்து.
இப்போது உலகம் போட்டிநிறைந்ததாக உள்ளது. எனவே, நமது தேசம் அனைத்துத் துறைகளிலும் வலிமையானதாக இருக்கவேண்டும். ராணுவ ரீதியாக வல்லமையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு, எந்த ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு எதிராகவும் வலுவாக இருக்கவேண்டும் என்பது பொருளல்ல.
நமது உடல் நலனுக்காக நாம் உடற்பயிற்சி செய்து வலுவ டைவதால், நம்மைத்தான் குறிவைக்கிறார் என்று நினைத்து பக்கத்து வீட்டுக்காரர் அச்சமடைய தேவையில்லை என்றார் மோடி.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.