தலாக் மத்திய அரசின் நிலைப்பாடு நியாயமானது

மதசுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடுகாட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்ததல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது என்று மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை மதத்தின் அடிப்படை அங்கமாக கருதமுடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

தலாக்கூறி விவாகரத்து பெறும் நடைமுறையில் மத்திய அரசின் நிலைப்பாடு நியாயமானது. எந்தமத நடை முறையாக இருந்தாலும் அது அரசமைப்பு சட்ட நிலைப்பாட்டுக்கு ஒத்துப்போக வேண்டும்.

நரேந்திர மோடி அரசின் முன்னுரிமைகளில் முக்கியகவனம் பெறுவது பாலின நியாயம், பாலின சமத்துவம், பாலின கண்ணியம் ஆகும்.

மதசுதந்திரம், வழிபாட்டு சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்கிறது. இவற்றுக்கு அடிப்படை உரிமைகளும் பாதுகாப்புதருகிறது. ஆனால் அறிவுக்குபுறம்பான, பாகுபாடு காட்டும் நடைமுறைகள் மத சுதந்திரத்தில் வராது.

குறிப்பிட்டமதத்தில் இருப்பதன் மூலம் சில பெண்கள் தமது உரிமைகளை இழக்கமுடியாது. பாலின சமத்துவம் என்பது அரசமைப்பு சட்டம் உருவானதிலிருந்தே அதில் இடம்பெற்றுள்ளது. முன்னேற்றமும் பெண்களுக்கு அதிகாரம் தருவதும் அரசின் முன்னுரிமைகளில் அடங்கியவை. தலாக்நடைமுறையை நீக்குவது தனிசட்டத்தை மீறுவதாகும் என சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு அச்சம் தெரிவிப்பதால் தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறோம். ஈரான், மொராக்கோ, எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலாக்நடைமுறையை சட்டம் மூலமாக ரத்து செய்துள்ளன இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...