பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக. அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடர்ச்சியாக ஊக்குவித்துவருகிறது.
அதற்காக பல்வேறு கட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறுதிட்டங்களில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாய மாக்கப்பட்டு வருகிறது.
ரூ.50-ல் இருந்து மூன்றாயிரம் ரூபாய்வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் தெரிவித்தார்.
இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கை யாளர்களின் சந்தேகங்களை கேட்டறிவதற்காக இலவச உதவி எண் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. “14444” என்பது அந்தஇலவச எண் ஆகும்.
இந்த இலவச உதவிஎண் மூலமாக இ-வாலெட், ஆதார் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்ட றியலாம்.
தொலைத்தொடர்பு துறை மற்றும் நாஸ்காம் மென்பொருள் சங்கம் இணைந்து இந்த இலவசஎண்ணை அறிமுகம் செய்துள்ளது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு துறை செயலாளர் தீபக், “இந்த உதவி எண் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்திமொழிகளில் பயன் பாட்டில் இருக்கும். விரைவில் நாடுமுழுவதும் மற்ற மொழிகளில் இந்தசேவை விரிவுபடுத்தப்படும்” என்றார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.